இலங்கையின் சுழல் பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கும் ஜயசூரிய

991

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் அனுபவ சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய இணைக்கப்பட்டுள்ளார்.

CPL தொடரில் விளையாடவுள்ள வனிந்து ஹஸரங்க!

இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லசித் எம்புல்தெனிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பிரவீன் ஜயவிக்ரம கொவிட்-19 தொற்று காரணமாக அணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் அணியிலிருந்து வெளியேறியுள்ளமையின் காரணமாக சுழல் பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும் நோக்கில் 30 வயதான அனுபவ சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மேற்குறித்த இரண்டு வீரர்களின் வெளியேற்றம் காரணமாக ஏற்கனவே துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன மற்றும் லக்ஷித மானசிங்க ஆகியோர் இலங்கை டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

List A போட்டிகளில் கன்னி சதமடித்த டில்ருவன் பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெற்ற பிரபாத் ஜயசூரிய, தற்போது உள்ளூர் போட்டிகளில் SSC அணிக்காக பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) ஆரம்பமாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<