ரோஹித் சர்மா இல்லாமல் ஆஸி புறப்பட்ட இந்திய அணி

201
India leaves for Australia

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் நேற்றுமுன்தினம் நிறைவுக்கு வந்த நிலையில், அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ள விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று (11) அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

.பி.எல் தொடரின் 13ஆவதுருவம் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி தொடங்கியதுடன், நேற்றுமுன்தினம் (10) நடைபெற்ற இறுதிப் போட்டியுடன் தொடர் நிறைவுக்கு வந்தது

>> இந்தியாவுக்கு எதிரான ஆஸி டெஸ்ட் அணியில் ஐந்து புதுமுக வீரர்கள்

இந்த நிலையில், .பி.எல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி அஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று T20i மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி தொடங்குகிறது

இதற்காக .பி.எல் தொடரில் இடம்பிடித்த வீரர்களும், .பி.எல் தொடரில் இடம்பெறாமல் ஏற்கனவே ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்த வீரர்களும்  நேற்று (11) அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

எதுஎவ்வாறாயினும், அவுஸ்திரேலியா தொடருக்காக டுபாயிலிருந்து சிட்னி நோக்கி சென்ற இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை

மாறாக, பெங்களூர் வந்து தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை பெற்று காயத்திலிருந்து பூரண குணமடைந்த பிறகு டெஸ்ட் தொடரில் பங்கேற்க அவர் செல்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்தக்டோபர் 18ஆம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இடது தொடையில் ரோஹித் சர்மா காயமடைந்த நிலையில், 4 போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதனால் அவுஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. 

>> பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவராகவும் பாபர் அசாம்

ஆனால், ரோஹித் திடீரென பிளேப் போட்டியில் களமிறங்கி, இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி காயத்திலிருந்து தான் மீண்டு விட்டதாக அறிவித்தார்

இதனையடுத்து .பி.எல் இறுதிப் போட்டி நடைபெற்ற தினம் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இருப்பார் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை பெற்று உடற்தகுதி பெற்றவுடன் டிசம்பர் 17இல் தொடங்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவதற்கு முன் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த விருதிமான் சாஹாவும் காயத்தினால் இந்த முறை இந்திய அணியோடு செல்லவில்லை. டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள சாஹா, காயத்திலிருந்து குணமடைந்தபின் அணியில் இணைய உள்ளார்.

>> Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு வீரர்கள் .பி.எல் தொடரிலும் விளையாடியதால், .பி.எல் தொடரை முடித்தவுடன் அனைவரும் கூடினர். இதில் ஹனுமா விஹாரி, சத்தீஸ்வர் புஜாரா மட்டும் கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து டுபாய் வந்து சேர்ந்தனர்

எதுஎவ்வாறாயினும், டுபாயிலிருந்து சிட்னியை சென்றடைந்த இந்திய அணி  வீரர்கள் இருவார சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சிட்னியில் பயிற்சிகளில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<