பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவராகவும் பாபர் அசாம்

115

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் சபை (PCB) தெரிவித்திருக்கின்றது.

LPL தொடருடன் இணையும் முன்னணி கிரிக்கெட் வர்னணையாளர்கள்!

இதன் மூலம் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியினை டெஸ்ட், ஒருநாள், T20 என மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் வழிநடாத்தும் அணித்தலைவராக மாறியிருக்கின்றார்.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பாகிஸ்தான் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் வழிநடாத்திய பாபர் அசாம், பாகிஸ்தானின் டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த அஷார் அலியிடம் இருந்து தலைமைத்துவப் பதவியினை தற்போது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் 62.80 என்கிற துடுப்பாட்ட சராசரியினைக் காட்டியிருக்கும் பாபர் அசாம் தனக்கு தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தானை வழிநடாத்த கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சி தருவதாக தெரிவித்திருக்கின்றார்

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் கொரோனாவால் பாதிப்பு

இதேநேரம், பாபர் அசாமின் ஆளுகைக்குள் வரும் பாகிஸ்தானின் டெஸ்ட் அணி, விளையாடும் முதல் டெஸ்ட் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடர் அமையவிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<