இந்தியாவுக்கு எதிரான ஆஸி டெஸ்ட் அணியில் ஐந்து புதுமுக வீரர்கள்

201

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய குாழாத்தில் அந்நாட்டு உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற ஐந்து புதுமுக வீரர்களுக்கு முதல்தடவையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வில் புகோவ்ஸ்கி மற்றும் சகலதுறை வீரரான கெமரூன் க்ரீன் ஆகிய இரண்டு வீரர்களும் முதல்தடவையாக குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்

இந்தியாவுடனான தொடரில் அறிமுகமாகும் 21 வயது ஆஸி. வீரர்

இந்தியாஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜனவரி 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இதில் நவம்பர் 27, 29, டிசம்பர் 2ஆம் திகதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6, 8ஆம் திகதிகளில் T20i போட்டிகளும் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் திகதி டெஸ்ட் தொடரும் ஆரம்பமாகவுள்ளது.  

இதற்காக விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேற்று (11) அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது

இந்த நிலையில், இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான ஆரொன் பிஞ்ச் தலைமையிலான 18 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாம் கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணி இன்று (12) அறிவிக்கப்பட்டது

இதன்படி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

முன்னதாக அறிவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் T20 குழாத்தில் இடம்பிடித்த 23 வயதுடைய சகலதுறை வீரரான கெமரூன் க்ரீன் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துள்ளார்

டிம் பெய்ன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இந்தக் குழாத்தில் 22 வயதுடைய வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வில் புகோவ்ஸ்கி, 27 வயதுடைய சுழல் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்வெப்சன், 30 வயதுடைய வேகப்பந்து சகலதுறை வீரரான மைக்கல் நெசர் மற்றும் 28 வயதுடைய மித வேகப் பந்துவீச்சாளரான ஷோன் அபேட் உள்ளிட்ட வீரர்களும் முதல்முறையாக அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வில் புகோவ்ஸ்கி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ள இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் வாய்ப்பை இழந்தார்

எனினும், தற்போது நடைபெற்று வருகின்ற ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்தார்.

ஆறு வருடங்களுக்கு பின் பிக் பேஷ் லீக்கில் மிச்சல் ஸ்டார்க்!

இதனிடையே, அவுஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே வேகப் பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் பாட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பெட் கம்மின்ஸ் இருக்கும் நிலையில் மேலதிகமாக ஷோன் அபேட், மைக்கல் நெசர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுழற் பந்துவீச்சுக்கு நெதன் லியோன் இருக்கும் நிலையில் அவருடன் குயின்ஸ்லாந்து சுழல் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த அனைத்து புதுமுக வீரர்களும் தற்போது நடைபெற்று வருகின்ற ஷெப்பீல்ட் ஷீல்ட் முதல்தரப் போட்டிகளின் முதல் சுற்றில் திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேநேரத்தில், இந்திய அணியுடன் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 19 வீரர்கள் கொண்ட அவுஸ்திரேலியா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஒன்பது வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தியா அணிக்கெதிராக நடைபெறவுள்ள 2ஆவது 3 நாட்கள் கொண்ட போட்டியானது பகலிரவுப் போட்டியாக சிட்னியில் நடைபெறவுள்ளதுடன், இதில் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் டிம் பெய்ன் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர்

Video- ஒருநாள் போட்டிகளை அடுத்தடுத்த விக்கெட்டுக்களுடன் ஆரம்பித்த பந்துவீச்சாளர்கள்

இதுஇவ்வாறிருக்க, அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான மெத்திவ் வேட், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் மேலதிக விக்கெட் காப்பு வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்

இதனிடையே, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், பெட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் ஜேம்ஸ் பாட்டின்சன் உள்ளிட்ட தங்களுடடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்

எனினும், இந்த வீரர்கள் அனைவரும் இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு எந்தவொரு முதல்தரப் போட்டியிலும் விளையாடவில்லை

இதனிடையே, பெட் கம்மின்ஸ் தொடர்ந்து அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணைத் தலைவராக செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவராகவும் பாபர் அசாம்

இதுஇவ்வாறிருக்க, காயம் காரணாக .பி.எல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய மிட்செல் மார்ஷ், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்திய அணியுடனான பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளார். எனினும், அவருடைய உபாதையைப் பொறுத்து விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம்  

ஷோன் அபேட், ஜோ பர்ன்ஸ், பெட் கம்மின்ஸ், கெமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், நெதன் லியோன், மைக்கல் நெசர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மெத்யூ வேட், டேவிட் வோர்னர் 

அவுஸ்திரேலிய அணி குழாம் 

ஷோன் அபேட், ஆஸ்டன் அகர், டிம் பெய்ன், ஜோ பர்ன்ஸ், ஜெக்ஸன் பேர்ட், அலெக்ஸ் கேரி, ஹெரி கான்வே, கெமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ட்ராவிஸ், ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், நிக் மெடிஸன், மிட்செல் மார்ஷ், மைக்கல் நெசர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, மார்க் ஸ்டீக்கட்டி, வில் சதர்லெண்ட், மிட்செல் ஸ்வெப்சன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<