இலகு வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார், கொழும்பு அணிகள்

314
Super League 2021 week 8 roundup

அங்குரார்ப்பண சுபர் லீக் கால்பந்து தொடரின் எட்டாவது வாரத்திற்கான போட்டிகள் அனைத்தும் வியாழன் (06) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (07) இடம்பெற்று முடிந்தன.

குறித்த போட்டிகளின் முடிவுகளின் சுருக்கத்தைப் பார்க்கலாம்.

டிபெண்டர்ஸ் கா. எதிர் ரெட் ஸ்டார் கா.க

சுகததாஸ அரங்கில் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தப் போட்டியின் முழு நேரம் முடியும்வரை எந்தவொரு அணியும் கோல்கள் எதனையும் பெறாமையினால் ஆட்டம் சமநிலையடைந்தது.

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா. 0 – 0 ரெட் ஸ்டார் கா.க  

ரட்னம் வி. எதிர் சீ ஹோக்ஸ் கா.க

வெள்ளிக்கிழமை குதிரைப் பந்தயத்திடலில் முதல் போட்டியாக மாலை ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்தது. எனினும், இரண்டாம் பாதியில் போட்டியின் 58ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் அணியின் தலைவர் சுபாஷ் மதுஷான் அவ்வணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, ஆட்ட நிறைவில் 1-0 என வெற்றி பெற்ற சீ ஹோக்ஸ் வீரர்கள் தமக்கான 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டனர். ரட்னம் வீரர்கள் இந்த தொடரில் இதுவரையில் எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: ரட்னம் வி. 0 – 1 சீ ஹோக்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள்

  • சீ ஹோக்ஸ் கா.க – சுபாஷ் மதுஷான் 58’

ரினௌன் வி. எதிர் அப்கண்ட்ரி லயன்ஸ் கா.

வெள்ளிக்கிழமை மாலை சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற முதல் போட்டியில் முதல் பாதியில் உபாதையீடு நேரத்தில் ஜொப் மைக்கல் பெற்றுக்கொடுத்த கோலுடன் ரினௌன் அணி ஆட்டத்தை 1-0 என வெற்றி கொண்டது. இந்த வெற்றியுடன் ரினௌன் வீரர்கள் தொடரில் தமது நான்காவது வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: ரினௌன் வி. 1 – 0 அப்கண்ட்ரி லயன்ஸ் கா.

கோல் பெற்றவர்கள்

  • ரினௌன் வி.க – ஜொப் மைக்கல் 45+2’

புளூ ஸ்டார் வி. எதிர் நியூ யங்ஸ் கா.

சுகததாஸ அரங்கில் வெள்ளிக்கிழமை இரண்டாவது போட்டியாக இடம்பெற்ற இந்த மோதலில் 22ஆவது நிமிடத்தில் ரமேஷ் மென்டிஸ் நியூ யங்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்று அவ்வணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், இரண்டாவது பாதியில் புளூ ஸ்டார் வீரர் செனால் சந்தேஷ் தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்ய, போட்டியின் 90ஆவது நிமிடத்தில் அர்ஷாடும் அவ்வணிக்கான அடுத்த கோலைப் பெற, போட்டி முடிவில் புளூ ஸ்டார் வீரர்கள் 4-1 என இலகு வெற்றியைப் பதிவு செய்தனர்.

இந்த போட்டியில் பெற்ற கோல்களுடன் செனால் சந்தேஷ் தொடரில் 10 கோல்களைப் பெற்று இதுவரை அதிக கோல்களைப் பெற்ற வீரர்கள வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

முழு நேரம்: புளூ ஸ்டார் வி. 4 – 1 நியூ யங்ஸ் கா.

கோல் பெற்றவர்கள்

  • புளூ ஸ்டார் வி.க – செனால் சந்தேஷ் 53’ 56’ 84’, மொஹமட் அர்ஷாட் 90’
  • நியூ யங்ஸ் கா.கரமேஷ் மென்டிஸ் 22’

கொழும்பு கா. எதிர் புளூ ஈகல்ஸ் வி.

குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதியில் மொமாஸ் யாபொவும், இரண்டாம் பாதியில் மொஹமட் ஆகிப்பும் கோல்களைப் பெற, கொழும்பு கால்பந்து கழகம் 2-0 என இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.

தொடரில் இதுவரை ஒரு வெற்றியையாவது பெறாத மற்றொரு அணியாக புளூ ஈகல்ஸ் அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: கொழும்பு கா. 2 – 0 புளூ ஈகல்ஸ் வி.

கோல் பெற்றவர்கள்

  • கொழும்பு கா.க – மொமாஸ் யாபொ 25’, மொஹமட் ஆகிப் 79’

சுபர் லீக் கால்பந்து தொடரின் இறுதி வாரத்திற்கான (ஒன்பதாவது வாரத்திற்கான) போட்டிகள் அடுத்த வார ஆரம்பத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<