வடக்கின் இரு புகழ்பூத்த பாடசாலைகளான சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலானவடக்கின் பெரும் சமர்என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பட்ட சமரின் 112ஆவது போட்டியானது இம்மாதம் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. இப்போட்டி தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அறிமுக நிகழ்வும் அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

தேசிய மட்டத்தில் சம்பியனாகிய யாழ் சென் ஜோன்ஸ் இளம் அணி

அணித் தலைவர் ஏ. அபிஷேக்கின்…

குறித்த நிகழ்வில் யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் திரு. எழில்வேந்தன், இப்போட்டிக்கு அனுசரணை வழங்குகின்ற மொபிடெல் நிறுவனத்தின் வடமாகாண தலைமை அதிகாரி, இரு கல்லூரிகளினதும் உப அதிபர்கள், விளையாட்டு முதல்வர்கள், பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள், மத்தியஸ்தர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்  ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த இவ்வருட   போட்டி ஏற்பாட்டாளர்களான   யாழ் மத்திய கல்லூரியின்  அதிபர் எழில்வேந்தன் அவர்கள்,  போட்டியின் போது வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தினை வழங்கினார்.  

தொடர்ந்து உரையாற்றிய பிரதான அனுசரணையாளர்களான மொபிடல் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அதிகாரி சுகத் அபயசிங்க, வராலாற்றுச் சிறப்புமிக்க இப்போட்டித்தொடரிற்கு அனுசரணையாளர்களாக தாம் இணைவதையிட்டு தனது மகிழ்வை வெளியிட்டார். இதன்போது 112ஆவது போட்டிக்கான மொபிடல் வெற்றிக்கிண்ணத்தினையும் அவர் அறிமுகம்செய்துவைத்தார். அத்துடன், சுகத் இரு கல்லூரி அணியினருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.   

இலங்கையில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான மொபிடல் நிறுவனம், பழமைமிக்க இந்த பெரும் சமர் போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் பிரதான அனுசரணையாளர்களாகத் திகழ்கின்றனர்.

குறித்த நிகழ்வின்போது சென். ஜோன்ஸ் கல்லூரியின் உப அதிபர் V.S.B துசிதரன் அவர்கள்இந்த போட்டியானது, வழமை போன்று இரு கல்லூரிகளினதும் மகத்துவங்கள் மற்றும் விழுமியங்களுக்கு  சான்றாக அமையும்எனத் தெரிவித்தார்.

Photos: St.Johns College vs J/Central College | 112th Battle of North 2018 – Press Conference

தொடர்ந்து இரு கல்லூரிகளினதும் வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்பின்னர், இரு அணி வீரர்களும் தமது எதிர் தரப்பினருக்கான தொப்பிகளை அணிவித்து தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு நூற்றாண்டு தாண்டிய பழைமை வாய்ந்த “வடக்கின் பெரும் சமர்” என வர்ணிக்கப்படும், யாழ் மத்திய கல்லூரி – சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான இப்போட்டி தொடர்பான முன்னோட்டங்கள், புகைப்படங்கள் மற்றும் போட்டி அறிக்கைகள் என்பவற்றினை ThePapare.com ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை ThePapare.com ஆனது உலகம் பூராகவுமுள்ள இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்கள், ஆதரவாளர்களுக்காக இவ்வருடம் தொடர்ச்சியான 3ஆவது ஆண்டாக வடக்கின் பேரும் சமரினை இணையம் வாயிலாக நேரடியாக ஒளிபரப்ப இருக்கின்றது.