அணித் தலைவர் ஏ. அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு 13 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு இரண்டுக்கான தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸை வென்ற யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாழ் தரப்பினர், கலஹிட்டியாவ மத்திய கல்லூரியை எதிர்கொண்டது.
பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவு இரண்டு (டிவிஷன்-2) அணிகளுக்கு…
கோட்டை, ஆனந்த ஷாஸ்த்ராலயா மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற நான்கு இன்னிங்ஸ்கள் கொண்ட இந்தப் போட்டியிலும் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஏ. அபிஷேக் அபார திறமையை வெளிக்காட்டினார்.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற வடக்கு வீரர்கள் எதிரணியை துடுப்பெடுத்தாட பணித்தனர். எனினும் அபிஷேக்கின் பந்து வீச்சுக்கு முன் விக்கெட்டுகளை தாரைவார்த்த கலஹிட்டியாவ மத்திய கல்லூரி 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
எனினும் ஷானுமிக்க ராஜபக்ஷ சிறப்பாக துடுப்பெடுத்தாடி 48 ஓட்டங்களை பெற்றார். அபிஷேக் 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு அபிஷேக் துடுப்பாட்டத்திலும் கைகொடுத்தார். அவர் 76 ஓட்டங்களைப் பெற அவ்வணியால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற முடிந்தது.
ஆட்ட நேரம் முடிவடையும்போது சென் ஜோன்ஸ் கல்லூரி 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்போது கலஹிட்டியாவ மத்திய கல்லூரி சார்பில் ஹேமால் தெவ்மிக்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
Photos: Singer Cup – Under 13 Division 2 Inter Schools Cricket Tournament
Photos of Singer Cup – Under 13 Division 2 Inter Schools Cricket Tournament
இறுதிப் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தபோதும் முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்றதன் மூலம் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இம்முறை பிரிவு இரண்டிற்கான சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இதன்மூலம் அடுத்த பருவகாலத்தில் பிரிவு ஒன்றில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் இந்த இரண்டு கல்லூரி அணிகளும் பெற்றுள்ளன.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய சென் ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் அபிஷேக் துடுப்பாட்டத்தில் 1000 க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் பந்து வீச்சிலும் சிறந்த திறமையை காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
கலஹிட்டியாவ மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 115 (26.2) – ஷானுமிக்க ராஜபக்ஷ 44, சனுக்க பியுமத் 23, ஏ. அபிஷேக் 6/28, வை. விதூஷன் 2/33, ஏ. ஜாசியல் 2/28
யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 138/7 (40) – ஏ. அபிஷேக் 76, ஹேமால் தெவ்மிக்க 4/38
முடிவு – போட்டி சமநிலையுற்றது. முதல் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் அணி தொடரின் சம்பியனாக மாறியது.