Home Tamil கடின வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தில் தடுமாறும் பங்களாதேஷ்

கடின வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தில் தடுமாறும் பங்களாதேஷ்

45

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை நிர்ணயம் செய்த கடின வெற்றி இலக்கை (511) நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் பங்களாதேஷ் அணியானது தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.  

சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க போராடும் இலங்கை அணி

சட்டோக்ரம் நகரில் இலங்கைபங்களாதேஷ் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்த போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணியானது 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 39 ஓட்டங்களையும், பிரபாத் ஜயசூரிய 03 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர் 

அதனையடுத்து இன்று (02) போட்டியின் நான்காம் நாளில் பங்களாதேஷை விட 455 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணிக்கு தொடக்கத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் பெற்று நம்பிக்கை தந்தார். அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினைத் தொடர்ந்து 157 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட இலங்கை அணியானது தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்தியிருந்தது 

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 74 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார் 

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஹசன் மஹ்மூட் 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, காலேத் அஹ்மட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார் 

இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகும் தினேஷ் சந்திமால்!

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த பங்களாதேஷ் அணியானது தமது தொடக்க வீரர்களில் ஒருவரான மஹ்முதுல் ஹஸனின் விக்கெட்டை அவர் 24 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்து. இதேநேரம் அணியின் இரண்டாம் விக்கெட்டாக முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் பெற்ற ஸாகிர் ஹஸன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்காக மொமினுல் ஹக் அரைச்சதம் பெற்று பெறுமதி சேர்த்தார். அவரின் பின்னர் சகீப் அல் ஹசன், லிடன் தாஸ் போன்றோர் பங்களாதேஷ் அணிக்காக சற்று ஆறுதல் தரும் ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதிலும் பங்களாதேஷ் அணியானது நான்காம் நாள் ஆட்டநிறைவில் 268 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு இன்னும் 243 ஓட்டங்கள் தேவைப்பட களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் மெஹிதி ஹஸன் 44 ஓட்டங்களுடன் உள்ளார். இதேநேரம் தய்ஜூல் இஸ்லாம் 10 ஓட்டங்களுடன் இருக்கின்றார். 

இதேவேளை பங்களாதேஷ் அணியின் ஆட்டமிழந்த துடுப்பாட்டவீரர்களில் மொமினுல் ஹக் 50 ஓட்டங்கள் எடுக்க, லிடன் தாஸ் 38 ஓட்டங்களையும், சகீப் அல் ஹஸன் 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

அதேவேளை இலங்கை பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ், லஹிரு குமார மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

போட்டியின் சுருக்கம் 

Result


Bangladesh
178/10 (68.4) & 318/9 (85)

Sri Lanka
531/10 (159) & 157/7 (40)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka run out (Liton Das) 57 105 6 0 54.29
Dimuth Karunaratne b Hasan Mahmud 86 129 8 1 66.67
Kusal Mendis c Mehidy Hasan Miraz b Shakib Al Hasan 93 150 11 1 62.00
Angelo Mathews c Mehidy Hasan Miraz b Hasan Mahmud 23 71 2 1 32.39
Dinesh Chandimal c Liton Das b Shakib Al Hasan 59 104 5 2 56.73
Dhananjaya de Silva lbw b Khaled Ahmed 70 111 6 2 63.06
Kamindu Mendis not out 92 167 7 2 55.09
Prabath Jayasuriya lbw b Shakib Al Hasan 28 75 3 0 37.33
Vishwa Fernando run out (Najmul Hossain Shanto) 11 26 2 0 42.31
Lahiru Kumara b Mehidy Hasan Miraz 6 12 1 0 50.00
Asitha Fernando run out (Taijul Islam) 0 4 0 0 0.00


Extras 6 (b 4 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 531/10 (159 Overs, RR: 3.34)
Bowling O M R W Econ
Khaled Ahmed 20 2 72 1 3.60
Hasan Mahmud 24 5 99 2 4.12
Shakib Al Hasan 37 4 110 3 2.97
Mehidy Hasan Miraz 46 5 146 1 3.17
Taijul Islam 32 5 106 0 3.31
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Lahiru Kumara 21 42 3 0 50.00
Zakir Hasan b Vishwa Fernando 54 104 8 0 51.92
Taijul Islam b Vishwa Fernando 22 61 1 0 36.07
Najmul Hossain Shanto c Dimuth Karunaratne b Prabath Jayasuriya 1 11 0 0 9.09
Mominul Haque lbw b Asitha Fernando 33 84 3 0 39.29
Shakib Al Hasan lbw b Asitha Fernando 15 23 1 0 65.22
Liton Das c Kusal Mendis b Asitha Fernando 4 3 1 0 133.33
Shahadat Hossain c Kamindu Mendis b Lahiru Kumara 8 36 1 0 22.22
Mehidy Hasan Miraz lbw b Prabath Jayasuriya 7 31 0 0 22.58
Khaled Ahmed b Asitha Fernando 1 11 0 0 9.09
Hasan Mahmud not out 2 7 0 0 28.57


Extras 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0)
Total 178/10 (68.4 Overs, RR: 2.59)
Bowling O M R W Econ
Vishwa Fernando 16 5 38 2 2.38
Asitha Fernando 10.4 1 34 4 3.27
Lahiru Kumara 11 5 19 2 1.73
Prabath Jayasuriya 24 4 65 2 2.71
Dhananjaya de Silva 7 2 14 0 2.00
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne b Hasan Mahmud 4 5 1 0 80.00
Nishan Madushka c Mehidy Hasan Miraz b Hasan Mahmud 34 45 5 0 75.56
Kusal Mendis b Khaled Ahmed 2 2 0 0 100.00
Angelo Mathews b Shakib Al Hasan 56 74 5 0 75.68
Dinesh Chandimal c Shahadat Hossain b Hasan Mahmud 9 7 2 0 128.57
Dhananjaya de Silva c Liton Das b Hasan Mahmud 1 7 0 0 14.29
Kamindu Mendis c Liton Das b Khaled Ahmed 9 17 2 0 52.94
Prabath Jayasuriya not out 28 67 2 0 41.79
Vishwa Fernando not out 8 16 1 0 50.00


Extras 6 (b 5 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 157/7 (40 Overs, RR: 3.92)
Bowling O M R W Econ
Khaled Ahmed 11 2 34 2 3.09
Hasan Mahmud 15 2 65 4 4.33
Shakib Al Hasan 10 0 39 1 3.90
Taijul Islam 4 0 13 0 3.25


Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Prabath Jayasuriya 24 32 3 0 75.00
Zakir Hasan c Dhananjaya de Silva b Vishwa Fernando 19 39 2 0 48.72
Najmul Hossain Shanto b Lahiru Kumara 20 55 2 0 36.36
Mominul Haque c Lahiru Kumara b Prabath Jayasuriya 50 56 8 1 89.29
Shakib Al Hasan c Nishan Madushka b Kamindu Mendis 36 53 3 0 67.92
Liton Das c Kusal Mendis b Lahiru Kumara 38 72 4 0 52.78
Shahadat Hossain lbw b Kamindu Mendis 15 34 2 0 44.12
Mehidy Hasan Miraz not out 81 110 14 0 73.64
Taijul Islam c Nishan Madushka b Kamindu Mendis 14 28 2 0 50.00
Hasan Mahmud not out 6 25 1 0 24.00
Khaled Ahmed b Lahiru Kumara 2 8 0 0 25.00


Extras 13 (b 9 , lb 2 , nb 2, w 0, pen 0)
Total 318/9 (85 Overs, RR: 3.74)
Bowling O M R W Econ
Vishwa Fernando 10 0 39 1 3.90
Asitha Fernando 15 2 62 0 4.13
Lahiru Kumara 15 3 50 4 3.33
Prabath Jayasuriya 27 2 99 2 3.67
Dhananjaya de Silva 8 2 25 0 3.12
Kamindu Mendis 10 0 32 3 3.20



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<