பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் தொடர் அட்டவணை அறிவிப்பு

788

மே மாதம் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.

RCB அணிக்காக அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹஸரங்க

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி. இன்) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, மே மாதம் 08ஆம் திகதி பங்களாதேஷ் பயணமாகின்றது.

பங்களாதேஷ் பயணமாகிய பின்னர், இலங்கை அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஆடவுள்ளதுடன், குறித்த பயிற்சிப் போட்டி மே மாதம் 11ஆம் திகதி இடம்பெறுகின்றது.

தொடர்ந்து இரு அணிகளும் பங்கெடுக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மே மாதம் 15ஆம் திகதி சட்டோக்ராம் நகரிலும், இரண்டாவது போட்டி மே மாதம் 23ஆம் திகதி டாக்காவிலும் நடைபெறுகின்றது.

கேன் வில்லியம்சனுக்கு அபராதம்

அதேவேளை இலங்கை அணி, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் தற்போது ஐந்தாம் இடத்திலும், பங்களாதேஷ் அணி எட்டாம் இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டித்தொடர் அட்டவணை

  • பயிற்சிப் போட்டி – மே மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை – சட்டோக்ராம்
  • முதல் டெஸ்ட் – மே மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை – சட்டோக்ராம்
  • இரண்டாவது டெஸ்ட் – மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை – டாக்கா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<