காலி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய கொழும்பு அணி 19 வயதுக்கு உட்பட்ட மாகாண மட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் இந்தப் போட்டியின் மற்றொரு குழு நிலை ஆட்டமாக ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொழும்பு அணியின் ஆரம்ப வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அபாரமாக செயற்பட்டதால் காலி அணி நிர்ணயித்த 283 என்ற சவாலான வெற்றி இலக்கை நெருக்கடி இன்றி எட்டியது.
இதன்போது நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அணித்தலைவருமான நவோத் பரணவிதான அதிரடியாக 28 பந்துகளில் 13 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று முதல் வரிசையில் வந்த தவீஷ அபிஷேக், பவன் ரத்னாயக்கவுடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 88 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் அந்த அணியின் மொத்த ஓட்டங்கள் 200ஐ தாண்டியது.
காலி அணிக்கு எதிராக த்ரில் வெற்றிபெற்ற தம்புள்ளை
இதன்போது தவீஷ அபிஷேக் 64 ஓட்டங்களையும் பவன் ரத்னாயக்க 80 பந்துகளில் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் காலி அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது. இதன் போது கொழும்பு மஹானாம கல்லுரியைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சொனால் டினூஷ கொழும்பு அணி சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணியின் ஆரம்ப துடுப்பட்ட வீரர்களான மொஹமட் ஷமாஸ் மற்றும் அணித்தலைவர் கமில் மிஷார 137 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ஷமாஸ் 80 பந்துகளில் 7 பௌண்ரிகளுடன் 65 ஓட்டங்களை பெற்றதோடு கமில் மிஷார தனது சதத்தை 3 ஓட்டங்களால் தவறவிட்டார். 119 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகளுடன் 97 ஓட்டங்களை பெற்றார்.
Photos: Colombo vs Galle | SLC U19 Super Provincial Tournament 2019
தொடர்ந்து வந்த அஹான் விக்ரமசிங்கவும் வேகமாக 55 ஓட்டங்களை பெற்றது கொழும்பு அணி வெற்றி இலக்கை எட்டுவதற்கு உதவியது. இறுதியில் கொழும்பு அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஒட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
கொழும்பு அணி குழுநிலை போட்டிகள் மூன்றிலும் வெற்றியீட்டி நெருக்கடி இன்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் தாம் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த காலி அணி இறுதிப் போட்டி வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | c Dilmin Rathnayake b Sonal Dinusha | 58 | 28 | 13 | 0 | 207.14 |
Chethaka Denuwan | st b Sonal Dinusha | 18 | 40 | 3 | 0 | 45.00 |
Thaveesha Abhishek | c Dilmin Rathnayake b Praveen de Silva | 64 | 101 | 8 | 0 | 63.37 |
Thevin Amarasinghe | c Praveen de Silva b Dilmin Rathnayake | 24 | 25 | 2 | 1 | 96.00 |
Pawan Rathnayake | c Praveen de Silva b Sonal Dinusha | 70 | 80 | 3 | 2 | 87.50 |
Dunith Wellalage | c Dilmin Rathnayake b Sandaruwan Chinthaka | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Sandun Mendis | c Thashika Nirmal b Sonal Dinusha | 27 | 18 | 2 | 1 | 150.00 |
Ashen Dilhara | not out | 3 | 2 | 0 | 0 | 150.00 |
Chihan Kalindu | not out | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Extras | 16 (b 1 , lb 0 , nb 2, w 13, pen 0) |
Total | 282/7 (50 Overs, RR: 5.64) |
Fall of Wickets | 1-72 (8.5) Navod Paranavithana, 2-88 (12.6) Chethaka Denuwan, 3-127 (20.5) Thevin Amarasinghe, 4-215 (42.1) Thaveesha Abhishek, 5-216 (43.2) Dunith Wellalage, 6-261 (47.6) Sandun Mendis, 7-278 (49.3) Pawan Rathnayake, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Praveen de Silva | 9 | 1 | 75 | 1 | 8.33 | |
Chamindu Wijesinghe | 3 | 0 | 33 | 0 | 11.00 | |
Thashika Nirmal | 4 | 1 | 27 | 0 | 6.75 | |
Sonal Dinusha | 10 | 39 | 0 | 4 | 0.00 | |
Kaveesha Dulanjana | 10 | 1 | 35 | 0 | 3.50 | |
Dilmin Rathnayake | 7 | 0 | 37 | 1 | 5.29 | |
Sandaruwan Chinthaka | 7 | 0 | 35 | 1 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mohammed Shamaz | c Chihan Kalindu b Ashen Dilhara | 65 | 80 | 7 | 0 | 81.25 |
Kamil Mishara | c Pawan Rathnayake b Chethaka Denuwan | 97 | 119 | 11 | 0 | 81.51 |
Ahan Wicrkamasinghe | st b Dunith Wellalage | 55 | 49 | 6 | 0 | 112.24 |
Sonal Dinusha | run out () | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Praveen de Silva | c Samith Isuru b Sandun Mendis | 12 | 11 | 0 | 1 | 109.09 |
Chamindu Wijesinghe | lbw b Dunith Wellalage | 13 | 11 | 1 | 0 | 118.18 |
Thashika Nirmal | not out | 14 | 15 | 1 | 0 | 93.33 |
Sandaruwan Chinthaka | not out | 6 | 6 | 1 | 0 | 100.00 |
Extras | 21 (b 0 , lb 5 , nb 1, w 15, pen 0) |
Total | 286/6 (49.2 Overs, RR: 5.8) |
Fall of Wickets | 1-137 (25.5) Mohammed Shamaz, 2-213 (38.4) Kamil Mishara, 3-223 (40.3) Sonal Dinusha, 4-250 (43.4) Praveen de Silva, 5-251 (44.1) Ahan Wicrkamasinghe, 6-272 (47.1) Chamindu Wijesinghe, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ashen Dilhara | 9 | 1 | 34 | 1 | 3.78 | |
Kavindu Dilhara | 5 | 0 | 48 | 0 | 9.60 | |
Dunith Wellalage | 10 | 1 | 47 | 2 | 4.70 | |
Navod Paranavithana | 4 | 0 | 28 | 0 | 7.00 | |
Samith Isuru | 7 | 0 | 35 | 0 | 5.00 | |
Sandun Mendis | 10 | 0 | 57 | 1 | 5.70 | |
Chethaka Denuwan | 4.2 | 0 | 32 | 1 | 7.62 |
முடிவு – கொழும்பு அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி