மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணையவுள்ள ஜேசன் ஹோல்டர்

143
IPLT20.COM

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் உபாதை காரணமாக தொடரிலிந்து முழுமையாக விலகியுள்ளதாக அந்த அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியில் சன்ரைஸர்ஸ் அணியை மிட்செல் மார்ஷ் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

IPL தொடரிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்? 

போட்டியில் தன்னுடைய முதல் ஓவரை வீசிய மிட்செல் மார்ஷ், இரண்டாவது பந்தை வீசும் போது, கணுக்காலில் வலியை உணர்ந்தார். குறித்த கணுக்கால் உபாதை கடுமையாக இருந்த காரணத்தால் பந்து ஓவரில் 4 பந்துகளை வீசிய நிலையில் களத்திலிருந்து வெளியேறிய இவர், மீண்டும் பந்துவீச களமிறங்கவில்லை.

இந்தநிலையில், போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நெருக்கடியான சூழ்நிலைக்கு முகங்கொடுத்ததால், மிட்செல் மார்ஷ் துடுப்பெடுத்தாட களமிறங்கினார். எனினும், அவரால் களத்தில் நிற்கமுடியாதவாறு வழியை உணர்ந்த நிலையில், ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார்.

மிட்செல் மார்ஷின் இந்த உபாதையை ஆராய்ந்த, அணியின் வைத்தியர்கள் அவரால் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என அறிவித்த நிலையில், மார்ஷ் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறுவதாக சற்றுமுன்னர் ஹைதராபாத் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

மத்தியவரிசை துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என அணிக்கு பலம் சேர்க்கக்கூடிய மார்ஷின் வெளியேற்றம் சன்ரைஸர்ஸ் அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவருக்கான மாற்று வீரராக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் பெயரிடப்பட்டுள்ளார்.

Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

ஜேசன் ஹோல்டர் மேற்கிந்திய தீவுகளில் வசித்துவரும் நிலையில், அவர் விரைவில் அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜேசன் ஹோல்டர் ஐ.பி.எல். உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் இணைவதற்கு முன்னர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என்பதுடன், அதன் பின்னரே அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜேசன் ஹோல்டர் இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதுடன், இதற்கு முன்னதாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2014ம் ஆண்டும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 2013ம் ஆண்டும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<