Home Tamil முதல் T20I இல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றி

முதல் T20I இல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றி

246
Sri Lanka tour of Australia 2022

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடரின் முதல் போட்டியில், அவுஸ்திரேலிய அணி டக்வெத் லூயிஸ் முறையில் 20 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

அத்துடன் இந்த வெற்றியோடு, அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

>> T20I உலகக் கிண்ண சம்பியன்களுக்கு சவால் தருமா இலங்கை??

இன்று (11) சிட்னியில் ஆரம்பித்திருந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க, முதலில் அவுஸ்திரேலிய வீரர்களை முதலில் துடுப்பாடப் பணித்திருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணியில் வனிந்து ஹஸரங்க, தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இணைக்கப்பட்டிருந்ததோடு, தினேஷ் சந்திமாலுக்கும் விக்கெட்காப்பு வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மறுமுனையில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, வலதுகை துடுப்பாட்டவீரரான ஜோஷ் இங்கிலீஷினை சர்வதேசப் போட்டிகளில் அறிமுகம் செய்திருந்தது.

இலங்கை அணி

பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணத்திலக்க, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (அணித்தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ

அவுஸ்திரேலிய அணி

ஆரோன் பின்ச்(அணித்தலைவர்), பென் மெக்டோர்மெட், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், அடம் ஷம்பா, ஜோஸ் ஹேசல்வூட்

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி அதிரடியான ஆரம்பத்தினைப் பெற்றிருந்த போதும், அவ்வணிக்கு முதல் நெருக்கடியினை வனிந்து ஹஸரங்க உருவாக்கினார். அதன்படி, அவுஸ்திரேலியா 30 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் அதன் அணித்தலைவர் ஆரோன் பின்ச்சின் விக்கெட் அவர் 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் பறிபோனது.

பின்னர் புதிய வீரராக களமிறங்கியிருந்த ஜோஷ் இங்கிலீஷ் சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும் அவரின் விக்கெட் சாமிக்க கருணாரட்னவின் துல்லியமான பந்துவீச்சு மூலம் பறிக்கப்பட்டது. சாமிக்கவினால் போல்ட் செய்யப்பட்ட இங்கிலீஷ் 18 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதனையடுத்து போட்டியில் மழை குறுக்கிட்டிருந்தது. எனினும் பின்னர், தொடர்ந்த போட்டியில் அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர்களுக்கு வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் நெருக்கடி உருவாக்க, இதற்கு இலங்கை அணியின் ஏனைய வேகப்பந்துவீச்சாளர்களான துஷ்மன்த சமீர மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரும் உரமூட்டியிருந்தனர். அதனால், அவுஸ்திரேலிய அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், கிளன் மெக்ஸ்வெல் ஆகியோர் 10 இற்கு குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழக்க மெதிவ் வேடும் 4 ஓட்டங்களோடு சொதப்பலாக செயற்பட்டிருந்தார்.

>> அகமதாபாத் அணியின் பெயர் வெளியானது

இதனையடுத்து பென் மெக்டெர்மட்டின் போராட்ட அரைச்சதத்துடனும், ஸ்டொய்னிஸின் அதிரடியோடும் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் கன்னி அரைச்சதம் பெற்றிருந்த பென் மெக்டெர்மட் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில், தலா 2 சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகள் அடங்கலாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 17 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களையும், துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ மற்றும் சாமிக கருணாரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 150 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப வீரர்களாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் களம் வந்திருந்தனர்.

>> மாலிங்கவின் வழிகாட்டல் அணிக்கு கூடுதல் பலம் – தசுன் ஷானக

இதில் தனுஷ்க குணத்திலக்க, இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே தனது விக்கெட்டினை வெறும் ஒரு ஓட்டத்துடன் ஜோஸ் ஹேசல்வூடிடம் பறிகொடுத்து ஏமாற்றினார். இவரின் பின்னர் களம் வந்த அவிஷ்க பெர்னாண்டோவும் பிரகாசிக்கவில்லை. ஆறு ஓட்டங்களினைப் பெற்றிருந்த அவிஷ்க பெர்னாண்டோ பேட் கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சரித் அசலன்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர், நல்ல இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட்டிருந்த போதும் அது அடம் ஷம்பாவின் சுழல் மூலம் தகர்க்கப்பட்டது. அந்தவகையில் 42 ஓட்டங்கள் வரை நீடித்த இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டத்தினை அடுத்து, மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 37 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் பெற்றிருந்தார். மறுமுனையில், சரித் அசலன்கவின் விக்கெட்டும் அவர் 16 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அடம் ஷம்பாவினால் வீழ்த்தப்பட்டது.

தொடர்ந்து மத்திய வரிசையில் தடுமாற்றம் காட்டிய இலங்கை அணி 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய நிலையில், ஆட்டத்தில் மீண்டும் மழையின் குறுக்கீடு உருவாகியது. பின்னர் மழை நிற்க, போட்டியின் வெற்றி இலக்கு 19 ஓவர்களுக்கு 143 ஓட்டங்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

>> அவுஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

தொடர்ந்து மழை நின்ற நிலையில் போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் சந்திமால், ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோஷ் ஹேசல்வூட் வெறும் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு பக்க பலமாக காணப்பட, அடம் ஷம்பா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை அவுஸ்திரேலிய அணியின் சுழல் வீரரான அடம் ஷம்பா பெற்றார். அடுத்தாக இரு அணிகளும் பங்கெடுக்கும் T20I தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெறவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



முடிவு – அவுஸ்திரேலிய அணி 20 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<