டெஸ்ட் வரலாற்றில் 30 வருட சாதனையை சமன் செய்த வோர்னர் – பெய்ன் ஜோடி

449
Image Courtesy - NDTV Sports

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்சயம் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரணடாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. 

இந்நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி தற்சமயம் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நிசங்கவின் சதத்துடன் ஒருநாள் தொடர் இலங்கை வளர்ந்துவரும் அணி வசம்

உத்தியோகபூர்வற்ற இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக பங்களாதேஷ் சென்றிருக்கும்…

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் வெறும் 67 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து சுருண்டு போனது. மேலும் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆவது அதிகுறைந்த ஓட்டங்களை இங்கிலாந்து அணி இதனூடாக பதிவு செய்தது. 

இங்கிலாந்து அணியின் வீழ்த்தப்பட்ட 10 விக்கெட்டுக்களுள் ஒரேயொரு விக்கெட் மாத்திரம், அதுவும் இறுதி 10 ஆவது விக்கெட் மாத்திரம் போல்ட் முறையில் வீழ்த்தப்பட்டது. மற்றைய ஏனைய 9 விக்கெட்டுக்களும் பிடியெடுப்பு முறையில் வீழ்த்தப்பட்டிருந்தது. குறித்த பிடியெடுப்புக்கள் மூலம் அவுஸ்திரேலிய அணியின் இரு வீரர்கள் இணைந்து 30 ஆண்டுகால சாதனை ஒன்றை சமன் செய்துள்ளனர். 

குறித்த போட்டியில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் பிடிக்கப்பட்ட 9 பிடியெடுப்புக்களுள் உஸ்மான் கவாஜா ஒரு பிடியெடுப்பை எடுத்திருந்தார். ஏனைய 8 பிடியெடுப்புக்களையும் விக்கெட் காப்பாளரும் அணித்தலைவருமான டிம் பெய்ன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் ஆகியோர் எடுத்திருந்தனர். 

போட்டியில் விக்கெட் காப்பாளரான டிம் பெய்ன், ரோரி ப்ரூன்ஸ், ஜோ டென்லி, கிறிஸ் வோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் பிடியெடுப்புக்களையும், சிலிப் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்ட டேவிட் வோர்னர், ஜேசன் ரோய், அணித்தலைவர் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ ஆகியோரின் பிடியெடுப்புகளையும் எடுத்திருந்தனர்.

அந்த அடிப்படையில் டேவிட் வோர்னர் – டிம் பெய்ன் ஜோடி இணைந்து 8 பிடியெடுப்புக்களை நிகழ்த்தியே இவ்வாறு டெஸ்ட் போட்டியொன்றில் ஒரு இன்னிங்ஸில் இரு வீரர்கள் தலா 4 பிடியெடுப்புக்கள் வீதம் பெற்று 30 ஆண்டுகால இந்தியர்களின் சாதனையை சமன் செய்துள்ளனர். மேலும் இரு வீரர்கள் இணைந்து இவ்வாறு பிடியெடுப்புக்களை நிகழ்த்துவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது தடவையாக நிகழ்ந்துள்ளது.

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பும்ரா சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இந்தி…

இதற்கு முன்னர் 1989 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் கராச்சியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் போது இந்திய அணியின் இரு வீரர்கள் தலா 4 பிடியெடுப்புக்கள் வீதம் எடுத்திருந்தனர். ஆனால் அப்போட்டியில் ஒரு வீரர் 5 பிடியெடுப்புக்களை எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

அப்போட்டியில் விக்கெட் காப்பாளரான கிரண் மோரே, ஸஹிட் ஸயீட், சலீம் யூஸூப், அப்துல் காதிர், வகார் யூனுஸ் ஆகியோரின் பிடியெடுப்புக்களையும், களத்தடுப்பாளரான மொஹமட் அஸாருடீன், ஆமிர் மலிக், சொஹைப் மொஹமட், ஜாவிட் மியண்டாட், வசீம் அக்ரம் மற்றும் சலீம் மலிக் ஆகியோரின் பிடியெடுப்புக்களை எடுத்திருந்தனர். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<