ஆப்கானுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 

341

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும் 16 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி இங்கே மூவகை போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆடுகின்றது. 

இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக இரு அணிகளும் பங்கெடுக்கும் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் அடங்கிய இலங்கை அணிக்குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

தனன்ஞய டி சில்வா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த குழாத்தில் பிரதி தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார். 

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட நம்பிக்கையாக அணித்தலைவர் தனன்ஞய டி சில்வா, திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர் 

அதேநேரம் பந்துவீச்சினைப் பொறுத்தவரை அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ ஆகியோரும் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் உள்ளனர் 

இவர்கள் தவிர இளம் வீரர்களான லஹிரு உதார, மிலான் ரத்நாயக்க மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோரும் ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர் 

ஆப்கான்இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி கொழும்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகுகின்றது 

இலங்கை டெஸ்ட் குழாம் 

தனன்ஞய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு உதார, சாமிக்க குணசேகர, மிலான் ரத்நாயக்க 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<