டயலொக்கின் அனுசரணையுடன் தொடங்கும் ஆசிய ஆடவர் கரப்பந்து சவால் கிண்ணம்

714

கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள மத்திய ஆசிய ஆடவர் கரப்பந்து சவால் கிண்ணம் போட்டிகளுக்கான அனுசரணையை வழங்க டயலொக் ஆசியாட்ட பி.எல்.சி நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

இந்தப் போட்டித் தொடர் இன்று திங்கட்கிழமை (09) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடை பெறவுள்ளது.

>> இலங்கைக்கு பதக்க எதிர்பார்ப்பை கொடுத்த 18 வயது வீராங்கனை

இரண்டாவது தடவையாக ஆசிய ஆடவர் கரப்பந்து சவால் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், பங்களாதேஷில் 2021ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பருவகால போட்டிகளில் இலங்கை சம்பியனாக முடிசூடியிருந்தது.

இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் சௌதி அரேபிய அணியை இன்று (09) மாலை 4 மணிக்கு எதிர்கொள்ளவுள்ளதுடன், நாளை நேபாளம் அணியை எதிர்கொள்கிறது. அதேநேரம் தங்களுடைய மூன்றாவது போட்டியில் 11ம் திகதி உஸ்பெகிஸ்தான் அணி, 13ம் திகதி ஆப்கானிஸ்தான் அணி மற்றும் 14ம் திகதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இறுதிப் போட்டி 15ம் திகதி நடைபெறவுள்ளது.

ஆசிய ஆடவர் கரப்பந்து சவால் கிண்ணத் தொடரை டயலொக் தொலைக்காட்சியின் 126வது அலைவரிசையில் பார்வையிட முடியும் என்பதுடன், எமது இணையத்தளமான Thepapare.com மற்றும் டயலொக் ViU செயலி மூலமாகவும் பார்வையிட முடியும்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<