Home Tamil முக்கோண ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை இளையோர்

முக்கோண ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை இளையோர்

1018

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை வீரர்கள் தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளனர்.

தலைவர் பதவியிலிருந்து விலகும் திமுத் கருணாரத்ன!

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகளும் பங்குபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

இந்த முக்கோண ஒருநாள் தொடரில் இரண்டாவது மோதலாக இலங்கை – பங்களாதேஷ் இளம் அணிகள் இடையிலான போட்டி திங்கட்கிழமை (20) அபுதாபியின் டோலரன்ஸ் ஓவல் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் இளம் வீரர்கள் முதலில் துடுப்பாடியதோடு 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்கள் எடுத்தனர்.

பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் அஹ்ரார் அமின் அதிகபட்சமாக 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை எடுத்தார்.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சில் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான மல்ஷ தருபத்தி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க விஷ்வ லஹிரு, கருக்க சங்கேத் மற்றும் ட்ரவின் மெதிவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 230 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி குறித்த இலக்கை 44.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து  அடைந்தது.

இலங்கை 19 வயதின் கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்ய அதன் துடுப்பாட்டத்தில் சிறப்பாக பங்காற்றிய சதீஷ் ஜயவர்தன சதம் கடந்து 122 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றார். இதேநேரம் ஆரம்ப வீரர்களில் ஒருவராக களம் இறங்கியிருந்த ஹிருன் கபுருபண்டார 51 பந்துகளில் 9 பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்றார்.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள புதிய T20 லீக்கில் 4 இலங்கை வீரர்கள்!

மறுமுனையில் பங்களாதேஷ் இளம் அணியின் பந்துவீச்சில் ஜிஷான் அலாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியும் அவரது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை இளம் அணிக்காக சதம் கடந்த சதீஷ் ஜயவர்தன தெரிவாகினார்.

இப்போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை இளம் கிரிக்கெட் அணி இந்த முக்கோண ஒருநாள் தொடரின் தமது அடுத்த போட்டியில் புதன்கிழமை ஆப்கானிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<