ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட தேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் ஏழு இலங்கை வீரர்களால் 16 இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு நேரடியாக தகுதிபெற்றுக் கொள்ளும் நோக்கில் ஆசிய பளுதூக்கல் சம்மேளளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதனைமுன்னிட்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பளுதூக்கல் சுப்பர் பிரிவு அணி பொலன்னறுவையில் உள்ள கல்லேல்லே விளையாட்டுத் தொகுதியில் தற்போது பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
மீண்டும் ஸ்குவாஷ் சம்பியனாகிய சாலிஹா இஸ்ஸடீன்
இந்த நிலையில், ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த திலங்க இசுரு குமார, 251 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய இலங்கை சாதனை படைத்தார். இதில் அவர் ஸ்னெட்ச் முறையில் 111 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 140 கிலோ கிராம் எடையையும் தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2019இல் சீனாவின் கிங்போவில் 240 கிலோ கிரோம் எடையைத் தூக்கி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அவர் முறிடித்தார்.
இதனிடையே ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட திலங்க பலகசிங்க, ஸ்னெட்ச் முறையில் 119 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 146 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 265 கிலோ கிராம் எடையைப் பதிவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.
இதில் ஸ்னெட்ச் முறையிலும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையிலும் அவர் தனித்தனியாக இலங்கை சாதனைகளை முறிடியத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு
முன்னதாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 263 கிலோ கிராம் எடையைத் தூக்கி சிந்தக லக்மாலினால் நிலைநாட்டப்பட்ட இலங்கை சாதனையை அவர் முறிடியத்தார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவரும், இலங்கையின் நட்சத்திர பளுதூக்கல் வீரருமான சின்தன கீதால் விதானகே, ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 171 கிலோ கிராம் எடையைத் தூக்கில் குறித்தி பிரிவில் புதிய இலங்கை சாதனை படைத்தார்.
முன்னதாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 160 கிலோ கிராம் எடையைத் தூக்கி நிலைநாட்டப்பட்ட தனது சொந்த சாதனையை சின்தன கீதான் முறிடியத்திருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, குறித்த எடைப் பிரிவில் சின்தனவுடன் போட்டியிட்ட இந்திக திஸாநாயக்க, ஸ்னெட்ச் முறையில் 137 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய இலங்கை சாதனை படைத்தார். இதில் சின்தாக கீதால் விதானகேவால் நிலைநாட்டப்பட்ட 128 கிலோ கிராம் சாதனையை இந்திக திஸாநாயக்க பொலன்னறுவையில் வைத்து முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
SAG பளுதூக்கல் முதல் நாளில் இலங்கைக்கு ஒரு தங்கம் உட்பட 5 பதக்கங்கள்
ஆண்களுக்கான 102 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை கடற்படையச் சேர்ந்த ஷானக்க பீட்டர்ஸ், 340 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய இலங்கை சாதனை நிலைநாட்டினார்.
இதில் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 170 கிலோ கிராம் எடையைத் தூக்கி மற்றுமொரு இலங்கை சாதனையை அவர் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை கடற்கரையைச் சேர்ந்த சதுரிக்கா வீரசிங்க, ஸ்னெட்ச் முறையில் 85 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 110 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 195 கிலோ கிராம் எடையைப் பதிவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.
இதில் ஸ்னெட்ச் முறையிலும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையிலும் அவர் தனித்தனியாக இலங்கை சாதனைகளை முறிடியத்து மூன்று இலங்கை சாதனையை முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேநேரம், பெண்களுக்கான 87 கிலோ கிராம் மேற்பட்ட பிரிவில் போட்டியிட்ட திமாலி ஹபுதென்ன, ஸ்னெட்ச் முறையில் 88 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 112 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 200 கிலோ கிராம் எடையைப் பதிவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.
முன்னதாக, முன்னதாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அவர் முறிடியத்திருந்தார்.
வீரர்களுக்கு திறமை அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்க திட்டம்
எனவே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பளுதூக்கல் பயிற்சிகள் தடைப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தின் கொவிட் – 19 விதிமுறைகளை பின்பற்றி கடந்த சில வாரங்களாக வீரர்களின் தற்போதைய திறமைகளை மதிப்பிடும் நோக்கில் இந்த விசேட பயிற்சி முகாம் பயிற்சியாளர் ஆர்.பி விக்ரமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் பொலன்னறுவையில் நடைபெற்று வருகின்றது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…