சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

192

உள்ளூர் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளின் முன்னேற்றத்தை பரிசீலிக்கும் போது இனிவரும் காலங்களில் தெற்காசிய விளையாட்டு விழாவில் வீரர்கள் வெளிப்படுத்திய திறமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதில் தெற்காசிய விளையாட்டு விழாவில் வீரர்கள் வெளிப்படுத்துகின்ற திறமைகள் சர்வதேச மட்டத்திலான போட்டிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருப்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு திறமை அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்க திட்டம்

மஹேல ஜயவர்தன தலைமையிலான உயர் செயல்திறன் குழுவினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பிலான விசேட வைபவம் விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர்கூடத்தில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றது

இதன்படி, 2022 ஆசிய விளையாட்டு விழா, பொதுநலவாய விளையாட்டு விழா, ஆசிய பரா விளையாட்டு விழாக்களில் பதக்கங்கள் வெல்லக்கூடியவர்கள் என இனங்காணப்பட்டுள்ள 56 வீர, வீராங்கனைகளின் உயர்ஆற்றல் பயிற்சிகளுக்கு வழங்கப்படவுள்ள நிதி உதவிக்கான ஒப்பந்தங்கள் டொரிங்டனிலுள்ள விளையாட்டுத்துறை பேரவை அலுவலகத்தில் எதிர்வரும் பெப்வரி மாதம் 5ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரை கைச்சாத்திடப்படவுள்ளது என தேசிய விளையாட்டுத்துறை பேரவைத் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்

மெய்வல்லுனர், குத்துச்சண்டை, நீச்சல், ஜுடோ, பளுதூக்கல் மற்றும் விசேட தேவைகள் கொண்ட பரா வீரர்கள் என 6 விளையாட்டுகளுக்கான வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதில் 16 மெய்வல்லுனர் வீரர்கள், 13 பளுதூக்கல் வீரர்கள், 5 குத்துச்சண்டை வீரர்கள் நன்மை பெறவுள்ளதுடன், நட்சத்திர நீச்சல் வீரரான மெதிவ் அபேசிங்க, ஜுடோ வீரரான என். தர்மசேன ஆகிய வீரர்களும் முதல் கட்டத்தின் கீழ் நன்மை பெறவுள்ளனர்.  

Video – வேட்டையாடப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி | Cricket Galatta Epi 49

இதனிடையே, விசேட தேவையுடைய 15 பரா வீரர்கள் உயர் செயல்திறன் குழுவினால் முன்மொழியப்பட்ட வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்

மறுபுறத்தில் முதல் கட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள வீரர்களின் பயிற்சியாளர்களுக்கும் அந்த வீரர்கள் பதக்கங்களை வெல்கின்ற போது ஒரு ஊக்கத் தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

எனவே, விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த வேலைத்திட்டமானது 2030ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

அத்துடன், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் நன்மை பெறவுள்ள அனைத்து வீரர்களினதும் திறமைகள் மற்றும் அடைவு மட்டங்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள விசேட மத்திய நிலையமொன்றும், பிரத்தியேக இணையத்தளம் ஒன்றும் செயற்படுத்தப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதுஇவ்வாறிருக்க, குறித்த வீரர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்படுத்தப்படும் அதிரடி மாற்றங்கள்!

இதன்படி, ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டியொன்றில் பதக்கம் வெல்கின்ற வீரர் ஒருவருக்கு 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) பரிசுத் தொகையை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் தனிநபர் போட்டியில் தங்கப் பதக்கம் முதல் வெண்கலப் பதக்கம் வரை வெல்கின்ற வீரர்களுக்கு 15 மில்லியன் முதல் 5 மில்லியன் ரூபா வரை பணப் பரிசு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஒலிம்பிக்கில் குழு நிலைப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கின்ற இலங்கை அணிக்கு 100 மில்லியன்களும் (10 கோடி ரூபா), ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் குழுநிலைப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கின்ற இலங்கை அணிக்கு 30 மில்லியன் ரூபா பணப் பரிசும், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்கின்ற இலங்கை அணிக்கு 10 மில்லியன் ரூபா பணப் பரிசும் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு

இந்த ஊடக சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் அநுராத விஜேகோன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர்நாயகம் அமல் எதிரிசூரிய, உயர்ஆற்றல் வெளிப்பாட்டுக் குழுத் தலைவர் சஞ்சய விக்ரமநாயக்க, விளையாட்டுத்துறை பேரவை உறுப்பினர்களான ஜூலியன் போலிங், டிலன்த மாலகமுவ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<