தெற்காசிய இளம் பருவத்தினரின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான விளையாட்டு சக்தியை வெளிப்பத்தும் யுனிசெப் (UNICEF) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ICC) என்பன கைகோர்க்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவ்ராஜ் சிங் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் இணைந்தனர்.
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் தமது அணிகளை வழிநடாத்தவுள்ள இளம் அணித் தலைவர்களே கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (04) நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அறிமுக வீரர்களுடன் இலங்கைக்கு எதிரான இந்திய T20 குழாம்
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை அணியுடன்..
கடந்த 2011 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை பெற்ற யுவ்ராஜ் சிங், 2000ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட ICC கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் ஒரு இளம் வீரராக தொடர் நாயகன் விருதை வென்றவராவார்.
சுகயீனமுற்று பின்னர் இந்திய கிரிக்கெட்டில் இணைந்த யுவ்ராஜ் சிங் கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் மாத்திரமன்றி விளையாட்டு உலகிலேயே பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களினது நன்மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றவராவார்.
இந்நிலையில், நேற்றைய நிகழ்வில் உரையாற்றிய யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவுக்கான இயக்குனர் ஜீன் கோப், “தெற்காசியாவில் 340 மில்லியன் இளம் பருவத்தினர் உள்ளனர். இந்த அறைக்குள் நுழைந்தபோது அதிக ஒலி மற்றும் ஆற்றலை நான் உணர்ந்தேன். நான் மிக நம்பிக்கையை பெற்றுள்ளேன். இந்த பிராந்தியத்தின் சவால்கள் பரந்தது. தெற்காசியாவின் அனைத்து இளம் பருவத்தினரதும் சிறந்த எதிர்காலத்திற்கு அவர்களது ஆற்றல் அஸ்திவாரமாக இருக்கும்” என்று சுட்டிக்காட்டினார்.
“உலகில் எங்கும் இல்லாத அளவு இளம் பருவத்தினர் தெற்காசியாவில் உள்ளனர். பெரும்பாலும் இரண்டில் ஒன்று என்ற கணக்கில் பெண்கள் 18 வயதிற்கு முன்னரே திருமணம் புரிவதோடு 5 இல் ஒருவர் 18 வயதை எட்டும் முன் குழந்தை பெறுகின்றனர். 10 இல் நான்கிற்கும் அதிகமான இளம் பருவ பெண்கள் எடை குறைந்தவர்களாவர். அனைத்து பகுதிகளிலும் உள்ள இளம் பருவத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தெற்காசிய நாடுகள் நிகழ்ச்சிகள் மற்றும் கொள்கைகளில் முதலீடு செய்ய வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய யுவ்ராஜ் சிங், “இளம் பருவம் என்பது அதிக வாய்ப்பு மற்றும் பெறுமானத்தை கொண்டதாகும். இளம் பருவத்தினருக்கு ஆதரவளிப்பது மற்றும் முதலீடு செய்வதன் மூலம் அவர்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியுமாக இருக்கும். தெற்காசியாவில் இளம் பருவத்தினருக்கு மேலும் அமைதியான, சுபீட்சமான மற்றும் சமத்துவம் கொண்ட எதிர்காலத்தை கட்டியெழுப்புவது எமது முன்னுரிமையாகும்” என்றார்.
10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை
2018 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பல கிரிக்கெட்..
தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் காற்று மாசுபடுவதால் முகம்கொடுத்திருக்கும் பாதிப்பு பற்றியும் யுவ்ராஜ் சிங் தனது உரையில் தொட்டுச் சென்றார். இந்த சவால்கள் விளையாட்டின் ஒரு பகுதி என்றும் வீரர்கள் அதனுடன் தனது ஆட்டத்தில் முன்னேற வேண்டும் என்றும் அவர் நம்புகிறார்.
தனது கிரிக்கெட் வாழ்வு பற்றி முடிவெடுக்கும் முன் 2019 உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணிக்காக விளையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் சமிக்ஞை காட்டியிருந்தார். இது தொடர்பில் அவர் கூறும்போது, “என் மீது எத்தனை பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்றார்.
இறுதியாக உலகெங்கும் உள்ள இளம் பருவத்தினருக்கு அவர் கூறிய செய்தியில், “வெற்றி பெறுவதற்கு நீங்கள் பல தோல்விகள் ஊடாகவே பயணிக்க வேண்டி இருக்கும். இதன்போது ஒருபோதும் பயத்தை வெளிப்படுத்த வேண்டாம்” என்றார்.
குறித்த நிகழ்வில் இடம்பெற்ற குழு விவாதம் ஒன்றைத் தொடர்ந்து இந்திய நட்சத்திரம், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மற்றும் தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்ற இளைஞர்களுக்கும் இடையே நட்புறவு கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றது.