மந்த கதியில் பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம்

4767
Sri Lanka Cricket Team

நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டியில், மந்த கதியில் ஓவர்களை வீசி போட்டியை தாமதப்படுத்திய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை வீரர்கள்போட்டிக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தினை விட அதிக நேரத்தினை எடுத்து கவனயீனமாக செயற்பட்ட காரணத்திற்காகவே அபராதம் என சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) போட்டி மத்தியஸ்தர் என்டி பிக்ரொப்ட் (Andy Pycroft) இதனை ஊர்ஜிதம்செய்திருந்தார்.

குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T-20..

.சி.சி இன் வீரர்கள் மற்றும் வீரர்களின் உதவி செயற்பாட்டாளர்கள் சட்டக்கோவை விதிமுறையில் சரம் 2.5.1 இற்கு அமைவாக ஓவர்கள் வீசுவதில் யாராவது சிறிய குற்றம் இழைத்தால் குறித்த அணியின் வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதமும் அணித் தலைவருக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதமும் தண்டப்பணம் அறவிடப்படும்.

இதன் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட இந்த குற்றத்தினால் இலங்கை அணி வீரர்கள் ஒவ்வொருவரும் போட்டியின் மூலம் கிடைக்கப்பெற்ற ஊதியத்தில் 10 சதவீதத்தையும், அணித் தலைவர் உபுல் தரங்க 20 சதவீதத்தையும் அபராதமாக செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். தரங்க தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை ஒப்புக்கொண்டதுடன் தண்டப்பணம் செலுத்துவதையும் ஏற்றுக்கொண்டார்.

மைதான நடுவர்களான ரன்மோர் மர்டினேஸ் மற்றும் ரவிந்திர விமலசிரி, மூன்றாம் நடுவர் ருச்சிர பல்லியகுருகே மற்றும் நான்காம் நடுவர் தீபல் குணவர்தன ஆகியோர் மூலம் இந்தக் குற்றச்சாட்ட முன்வைக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்றிருந்த இப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் சுற்றுலா பங்களாதேஷ் அணியினரை வீழ்த்தி அசத்தல் வெற்றியினைப் பெற்றிருந்தது.

இதன்போது முதலில் துடுப்பாடியிருந்த பங்களாதேஷ் அணி, 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களினை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றிருந்தது. பதிலுக்கு ஆடியிருந்த இலங்கை அணி 18.5 ஓவர்களில் வெற்றியிலக்கினை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.