அஷான், மிலிந்த ஆகியோரின் சதங்களின் உதவியுடன் SSC வலுவான நிலையில்

399

2017/2018 பருவ காலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றுத் தொடரின் பிரிவு A மற்றும் பிரிவு B இற்கான போட்டிகள்  இன்று நடைபெற்றன.

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் NCC

NCC மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற NCC அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தமிழ் யூனியன் அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடிய தமிழ் யூனியன் அணி தமது முதல் இன்னிங்சுக்காக 38.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடும் NCC அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 117 (38.3) – மனோஜ் சரத்சந்திர 33, தரிந்து கௌஷால் 2/19, சாமிக கருணாரத்ன 2/19, லஹிரு குமார 2/21, லசித் அம்புல்தெனிய 2/25

NCC – 125/2 (35) – லஹிரு உதார 45, சந்துன் வீரக்கொடி 34, மலிங்க அமரசிங்ஹ 24*


SSC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு SSC மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சரசென்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை SSC அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய SSC அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது தமது முதல் இன்னிங்சுக்காக 81 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 380 ஓட்டங்களைப் பெற்றது.

SSC அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சம்மு அஷான் 107 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

SSC – 380/4 (81) – சம்மு அஷான் 107, மிலிந்த சிறிவர்தன 103*, திமுத் கருணாரத்ன 83, கௌஷால் சில்வா 42


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராகம கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 26 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் – 90/2 (26) – சமிந்த பெர்னாண்டோ 55*

4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு விளையாட்டுக் கழகம்

கொழும்பு விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை சோனகர் அணிக்கு வழங்கியது. இதன் படி தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடும் சோனகர் விளையாட்டுக் கழக அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 69 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் – 213/2 (69) – ப்ரிமோஷ் பெரேரா 104*, இரோஷ் சமரசூரிய 41, பபசர வடுகே 32, சஹான் விஜேரத்ன 20*


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது தமது முதல் இன்னிங்சுக்காக 87.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் – 293 (87.2) – சசித்திர சேரசிங்ஹ 63, ஒஷத பெர்னாண்டோ 47, மலிந்த புஷ்பகுமார 34, கசுன் விதுர 30, ரோஹித் தாமோதரன் 23, சுராஜ் ரந்திவ் 6/90, சமிகர எதிரிசிங்ஹ 2/72


இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்   

பனாகொடை இராணுவப்படை மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துறைமுக அதிகார சபை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இராணுவப்படை விளையாட்டுக் கழக அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இராணுவ அணி தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 84 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 197/7 (84) – லியோ பிரான்சிஸ்கோ 40*, குமார டி சில்வா 40, நவோத் இழுக்வத்த 27, துஷான் விமுக்தி 27, சானக்க கோமசாரு 2/15

போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.