CPL இல் விளையாட சகிப் அல் ஹசனுக்கு அனுமதி மறுப்பு?

105

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் சகிப் அல் ஹசனுக்கு கரீபியன் பிரிமீயர் லீக் (CPL) கிரிக்கெட் தொடரில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த வருட கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடர் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 19ஆம் திகதி வரை வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை 33 லீக் போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெறுகின்றன

இலங்கையினால் முன்னேற்றம் கண்ட பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்

இம்முறை போட்டித் தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களின் விபரம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியருந்ததுடன், ஜமைக்கா தலாவாஸ் அணி பங்களாதேஷ் அணி வீரர் சகிப் அல் ஹசனை மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது

இந்த நிலையில், சகிப் அல் ஹசனுக்கு இம்முறை கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அனுமதி வழங்காது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியா அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மைதானத்தில் விளையாடவுள்ளது

இதனால், பலமிக்க இந்த மூன்று அணிகளுக்கும் எதிராக வலுவான ஒரு அணியை களமிறக்க பங்களாதேஷ் தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Video – இலங்கை அணிக்கு கைகொடுத்த 90s Kids | Cricket Galatta Epi 55

இதனால் சகிப் அல் ஹசனுக்கு கரீபியர் பிரிமீயர் லீக்கில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வாய்ப்பில்லை என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு பிரதானி அக்ரம் கான் கருத்து தெரிவிக்கையில்

”நாங்கள் சகிப் அல் ஹசனுக்கு கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்க அனுமதி கொடுப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது, அதுகுறித்து முடிவு எடுப்போம்” என தெரிவித்துள்ளார்

முன்னதாக சகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை புறக்கணித்து விட்டு, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட்டில் விளையாட விரும்பினார். அதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video – 35 வருடகால அபிமானத்தை ஒரே இரவில் பறிகொடுத்த இலங்கை அணி…!

எதுஎவ்வாறாயினும் இலங்கை அணியுடன் அண்மையில் நிறைவுக்கு வந்த ஒருநாள் தொடரில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த சகிப் அல் ஹசன், மூன்று போட்டிகளிலும் முறையே 15, 0, 4 ஓட்டங்களைப் பெற்று ஏமாற்றம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும், ஏனைய வீரர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக பங்களாதேஷ் அணி குறித்த தொடரை வென்று தமது கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணிக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரொன்றை வென்ற சாதனையை படைத்தது.  

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…