Home Tamil இம்தியாஸ் ஸ்லாஷாவின் பிரகாசிப்புடன் இலங்கைக்கு 2வது வெற்றி

இம்தியாஸ் ஸ்லாஷாவின் பிரகாசிப்புடன் இலங்கைக்கு 2வது வெற்றி

Sri Lanka Emerging Team tour of Japan 2023

297

ஜப்பான் தேசிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் ஜப்பான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

>> மதீஷவின் அதிரடி பந்துவீச்சோடு சென்னை சுபர் கிங்ஸ் வெற்றி 

ஜப்பான் அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய இலங்கை அணிக்கு மோசமான ஆரம்பம் மாத்திரமே கிடைத்தது. முதல் பந்தில் சிதார ஹபுஹின்ன ஆட்டமிழக்க, இலங்கை அணி 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது துனித் ஜயதுங்க ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை அணியின் இன்னிங்ஸ் இறுதிவரை மந்தமான ஓட்டவேகத்துடன் கடக்கப்பட்டிருந்தது. துடுப்பாட்ட வீரர்களை பொருத்தவரை செஹான் பெர்னாண்டோ 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, இம்தியாஸ் ஸ்லாஷா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களை தவிர்த்து சஹில் டயஸ் 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்த ஜப்பான் அணியின் ரியோ சகுரனோ 4 ஓவர்களில் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பியூஸ் கும்பஹாரே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கியிருந்த ஜப்பான் அணியை பொருத்தவரை முதல் போட்டியை போன்று ஓட்டவேகத்தின் தடுமாற்றம் கண்டு நெருக்கடியை சந்தித்ததது. அதுமாத்திரமின்றி இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் விட்டுக்கொடுக்கப்பட்டன.

எந்தவொரு நேர்த்தியான இணைப்பாட்டமும் பெறப்படாத நிலையில், தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஜப்பான் அணி 16 ஓவர்கள் நிறைவில் வெறும் 57 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஜப்பான் அணியின் சார்பாக 2 வீரர்கள் மாத்திரமே இரட்டையிலக்க ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். சௌடா வடா 11 ஓட்டங்களையும், வடரு மியாயுச்சி 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இம்தியாஸ் ஸ்லாஷா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, டெலோன் பீரிஸ் மற்றும் லக்ஷான் கமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை வளர்ந்துவரும் அணி வெற்றிக்கொண்டு 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், 3வது போட்டி சனிக்கிழமை (13) நடைபெறவுள்ளது.

சுருக்கம்

இலங்கை – 125/8 (20), செஹான் பெர்னாண்டோ 30, இம்தியாஸ் ஸ்லாஷா 27, சஹில் டயஸ் 22, ரியோ சகுரனோ 25/4, பியூஸ் கும்பஹாரே 22/2

ஜப்பான் – 57/10 (16), சௌடா வடா 11, வடரு மியாயுச்சி 10, இம்தியாஸ் ஸ்லாஷா 5/3, லக்ஷான் கமகே 6/2, டெலோன் பீரிஸ் 11/2

முடிவுஇலங்கை வளர்ந்துவரும் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Japan
57/10 (16)

Sri Lanka Emerging Team
125/8 (20)

Batsmen R B 4s 6s SR
Sithara Hapuhinna run out () 0 1 0 0 0.00
Dunith Jayatunga c Shogo Kimura b Reo Sakurano 2 4 0 0 50.00
Shehan Fernando lbw b Ibrahim Takahashi 30 33 1 0 90.91
Sahil Dias c Shogo Kimura b Reo Sakurano 22 24 2 0 91.67
Sakuna Liyanage b Piyush Kumbhare 8 7 1 0 114.29
Imthiyas Slaza c & b Reo Sakurano 27 24 3 0 112.50
Ranmith Jayasena lbw b Piyush Kumbhare 10 11 1 0 90.91
Lakshan Gamage b Reo Sakurano 13 13 2 0 100.00
Dellon Peiris not out 5 3 1 0 166.67


Extras 8 (b 1 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 125/8 (20 Overs, RR: 6.25)
Bowling O M R W Econ
Ibrahim Takahashi 4 0 22 1 5.50
Reo Sakurano 4 0 25 4 6.25
Kento Ota-Dobell 3 0 23 0 7.67
Piyush Kumbhare 4 0 22 2 5.50
Muneeb Siddique 4 0 24 0 6.00
Kendel Kadowaki Fleming 1 0 7 0 7.00


Batsmen R B 4s 6s SR
Lachlan Lake c & b Dellon Peiris 2 7 0 0 28.57
Shogo Kimura c Ranmith Jayasena b Imthiyas Slaza 1 6 0 0 16.67
Kendel Kadowaki Fleming c Sithara Hapuhinna b Dellon Peiris 4 9 0 0 44.44
Ibrahim Takahashi b Lakshan Gamage 1 6 0 0 16.67
Wataru Miyauchi b Harshana Wickramasinghe 10 33 0 0 30.30
Tsuyoshi Takada b Lakshan Gamage 3 6 0 0 50.00
Souta Wada run out () 11 13 1 0 84.62
Reo Sakurano b Harshana Wickramasinghe 0 1 0 0 0.00
Muneeb Siddique c Sithara Hapuhinna b Imthiyas Slaza 5 8 0 0 62.50
Piyush Kumbhare not out 5 5 1 0 100.00
Kento Ota-Dobell b Imthiyas Slaza 0 2 0 0 0.00


Extras 15 (b 0 , lb 9 , nb 0, w 6, pen 0)
Total 57/10 (16 Overs, RR: 3.56)
Bowling O M R W Econ
Danal Hemananda 4 0 10 0 2.50
Dellon Peiris 3 0 11 2 3.67
Imthiyas Slaza 3 0 5 3 1.67
Lakshan Gamage 2 0 6 2 3.00
Harshana Wickramasinghe 3 0 9 2 3.00
Sahil Dias 1 0 7 0 7.00