ஹஸரங்கவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

315
Wanindu Hasaranga

இலங்கை T20I அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. 

வனிந்து ஹஸரங்க கடந்த 24 மாதங்களில் 5 தரமிறக்கல் புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், அவருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

>> நியூசிலாந்து குழாத்தில் இருந்து வெளியேறும் கொன்வேய்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியின் பின்னர், நடுவரின் தீர்ப்புக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாக அவருக்கு 3 தரமிரக்கல் புள்ளிகள் வழங்கப்பட்டதுடன், போட்டிக்கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஹஸரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள போட்டி தடையின்படி ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 T20I என முதலில் வரும் சர்வதேச போட்டிகளில் அவரால் விளையாட முடியாது. எனவே அடுத்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் 2 T20I போட்டிகளில் ஹஸரங்கவால் விளையாட முடியாது. 

அதேநேரம் இந்தப் போட்டியின் போது நடுவரின் அறிவுறுத்தலை மீறி துடுப்பாட்ட மட்டை கை பிடியில் உள்ள இறப்பரினை மாற்றியதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸிற்கு 2 தரமிறக்கல் புள்ளிகள் மற்றும் போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<