இலங்கை பிரிமியர் லீக் B மட்டத்திலான மூன்று போட்டிகளின் மூன்றாவதும் இறுதியுமான நாள் இன்று நடைபெற்றன. குறித்த 3 போட்டிகளிலும் எதிர்பார்க்காத வகையில் மூன்று அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.

மக்கோன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் மற்றும் களுத்துறை பௌதீக கலாச்சார கழகத்திக்கு இடையிலான போட்டியில் 156 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் குறித்த இலக்கை 13.2 ஓவர்களுக்குள் அடைந்து 5 விக்கெட்டுகளால் இலகு வெற்றி பெற்றது.

அத்துடன் நேற்றைய நாள் 3.16 புள்ளிகளுடன் 7வது இடத்திலிருந்த அவ்வணி இன்றைய நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 19.915 புள்ளிகளைப் பெற்று தர வரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டு கழகத்துக்கிடையிலான போட்டியில் இவ்விரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகளாக இருக்கின்றபடியால் போட்டி சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொலிஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 119 ஓட்டங்களால் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது.

கடற்படை அணி வெற்றி பெற்றமையினால் தர வரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய அதே நேரம் பொலிஸ் அணி 6ஆவது இடத்திலிருந்து 8ஆவது இடத்துக்கு கீழிறங்கியது.

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகத்துடனான முதலாவது போட்டியிலேயே லங்கன் கிரிக்கெட் கழகம் தனது வெற்றியை பதிவு செய்ததோடு தர வரிசையில் இன்றைய தினம் நான்கவது இடத்தைப் பதிவு செய்து கொண்டது.

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை பௌதீக கலாச்சார கழகம்

156 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது, தனது இரண்டாவது இன்னிங்சுக்காக 27 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், மூன்றாவதும் இறுதியுமான நாளான இன்று வெற்றி பெற 68 ஒட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், எஞ்சிய 6 விக்கெட்டுகளுடன்  களமிறங்கிய களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து குறித்த இலக்கை அடைந்து ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.   

நேற்றைய நாள் ஆட்ட நேரம் முடியும் வரை சிறப்பான நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சதுர தமித் இன்று ஆட்டம் ஆரம்பித்த போது மேலாதிகமான ஓட்டங்கள் எதுவும் பெறாமலேயே ஆட்டமிழந்து சென்றார்.

அதன் பின்னர், பத்தும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து கொண்ட ரசிக்க பெர்னாண்டோ இருவரும் இணைந்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பத்தும் நிஸ்ஸங்க 63 பந்துகளுக்கு முகம் கொடுத்து 27 ஓட்டங்களைப் பெற்ற அதே வேளை, மறுமுனையில் அதிரடியாக துடுப்பாடிய ரசிக்க பெர்னாண்டோ 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 47 ஓட்டங்களை விளாசினார்.

மிகக்குறைந்த வெற்றி இலக்கு என்பதால் குருநாகல இளையோர் கிரிக்கெட் கழக பந்து வீச்சளார்களினால் எவ்விதமான அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியவில்லை. எனினும், அத்தருணத்தில் சிறப்பாக பந்து வீசிய மிதுன் ஜெயவிக்ரம 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சரித் மாபடுன மற்றும் ருவந்த ஏக்கநாயக்க தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 197 (55.4) – ஹஷான் பிரபாத் 82, ருவந்த ஏக்கநாயக்க 46, தர்ஷன மஹவத்த 30, சாரங்க ராஜகுரு 19, ரமேஷ் செல்வராஜ் 63/6

களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192 (54)  – பத்தும் நிஸ்ஸங்க 64, சதுர தமித் 27, பஹாட் பாபர் 24, தில்ஷான் மென்டிஸ் 23, ருவந்த ஏக்கநாயக்க 40/5, சாரங்க ராஜகுரு 20/2, சமிந்த பத்திரன 30/2

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 151 (40.4) – ஹஷான் பிரபாத் 39*, தனுஷ்க தர்மசிறி 39, சாரங்க ராஜகுரு 33, தாரக வடுகே 11, ரசிக பெர்னாண்டோ 46/3, ரமேஷ் செல்வராஜ், 71/3, பஹாட் பாபர் 7/2

களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 159/5 (40.4) –  ரசிக பெர்னாண்டோ 47* பத்தும் நிஸ்ஸங்க 27*, சதுர தமித் 33, தமிண்து அஷான் 12, பஹாட் பாபர் 13, மிதுன் ஜெயவிக்ரம 23/3, சரித் மாபடுன 39/1, ருவந்த ஏக்கநாயக்க 32/1

போட்டி முடிவு : களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி


இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

முதலாவது இன்னிங்சுக்காக இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்ட 376 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் முதலாவது இன்னிங்சுக்காக 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து மீண்டும் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டது.

மேலும், 280 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் களமிறங்கிய அவ்வணி நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.

அதன்படி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு 187 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் எஞ்சிய 5 விக்கெட்டுகளுடன், போட்டியினை சமநிலை படுத்தும் நோக்கில் இறுதி நாளான இன்று களமிறங்கியது.

எனினும், மீண்டுமொரு முறை சிறப்பாக பந்து வீசிய இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் 19.1 ஓவர்களுக்குள் 65 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இன்னிங்ஸ் மற்றும் 119 ஓட்டங்களால் வெற்றியைத் தழுவியது.

32 ஓட்டங்களுடன் களத்திலிருந்த சமித் துசந்த மேலும் ஐந்து ஓட்டங்களை இன்றைய நாள் பெற்றுக்கொண்டதோடு ஆட்டமிழந்து சென்றார். இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய சுவஞ்சி மதநாயக்க ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 34 ஓட்டங்களைத் தவிர ஏனையோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றனர்

சிறப்பாகப் பந்து வீசிய அஷான் ரணசிங்க மற்றும் இஷான் அபேசேகர தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 376 (117.2) – குசல் எதுசூரிய 145, இஷான் அபேசேகர 46*, புத்திக்க ஹசரங்க 55, சுவஞ்சி மதநாயக்க 108/5, கயந்த விஜயதிலக்க 63/1, மகேஷ் பிரியதர்ஷன 83/1, சசிந்து பெரேரா 57/1, துஷிற மதனயக்க 16/1

பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 96 (36.1) – அசேல அழுத்கே 23, மகேஷ் பிரியதர்ஷன 22, சமித் துசந்த 10, ஹேஷான் பெரேரா 10, அஷான் ரணசிங்க 20/3, திலங்க ஆவர்ட் 25/2, டினுஷ்க மாலன் 4/2

பொலிஸ் விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 161 (43.1) – சமித் துசந்த 37, சுவஞ்சி மதநாயக்க 34*, தரிந்து டில்ஷான் 18, அகில லக்க்ஷான் 19, ஹேஷான் பெரேரா 19, அஷான் ரணசிங்க 34/3, இஷான் அபேசேகர 67/3, டினுஷ்க மாலன் 31/2, மதுர மதுசங்க 6/1,

போட்டி முடிவு : கடற்படை அணி இன்னிங்ஸ் மற்றும் 119 ஓட்டங்களால் வெற்றி


இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்காக மேலும் 78 ஓட்டங்களை மாத்திரமே பெற வேண்டிய நிலையில் இன்றைய நாள், எஞ்சிய 8 விக்கெட்டுகளுடன் களமிறங்கிய லங்கன் கிரிக்கெட் கழகம் 20.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 72 ஓட்டங்களுக்கு இழந்து இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களால் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக கூடிய ஓட்டங்களாக ஹஷான் ஜேம்ஸ் மற்றும் ஷொஹான் ரங்கிக்க முறையே 27, 26 ஓட்டங்களைப் பதிவு செய்தனர். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நவீன் கவிகார தனது சிறந்த பந்து வீச்சினால் மீண்டுமொரு முறை 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாகப் பதிவு செய்து கொண்டார்.

அதே நேரம் ரஜீவ வீரசிங்க 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் ஷிரான் பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 230 (73) – அசிர எறங்க 59, ரங்க திசாநாயக்க 41, லஹிறு ஸ்ரீ லக்மால் 36, ஹஷான் ஜேம்ஸ் 32, நவீன் கவிகார 63/5, ஷிரான் பெர்னாண்டோ 47/3, ரஜீவ வீரசிங்க 70/2

லங்கன்  கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (86.4) – ரஜீவ வீரசிங்க  77*, மதுரங்க சொய்சா 68, லால் குமார் 35, பசிந்து பிம்சார 18, நிலான் பிரியநாத் 64/4, லஹிறு லக்மால் 40/2, சஹன் ஜயவர்தன 31/1

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 80 (32.5) – ஹஷான் ஜேம்ஸ் 27, ஷொஹான் ரங்கிக்க 26, லஹிறு லக்மால் 14, நவீன் கவிகார 30/5, ரஜிவ வீரசிங்க 14/3, ஷிரான் பெர்னாண்டோ 35/1

போட்டி முடிவு : லங்கன் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களால் வெற்றி

புள்ளிகள் அட்டவணை

po