மதீஷவின் அபார பந்துவீச்சோடு சென்னை சுபர் கிங்ஸ் வெற்றி

170
MATHEESA PATHIRANA

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி டெல்லி கெபிடல்ஸ் வீரர்களை 27 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>> முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இலங்கை இளையோர்

இந்த வெற்றியுடன் இம்முறை IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியானது தம்முடைய 7ஆவது வெற்றியினைப் பதிவு செய்ய, இது டெல்லி அணிக்கு 7ஆவது தோல்வியாக மாறியிருக்கின்றது.

சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி நேற்று (09) சென்னை சேப்பாக்கத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை தமக்காகப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தனர்.

அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சிவம் டூபே 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுக்க, முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் களமிறங்கிய எம்.எஸ்.டோனி 09 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 20 ஓட்டங்கள் பெற்றார்.

இதேவேளை டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் மிச்சல் மார்ஷ் 03 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அக்ஷார் பட்டேல் 02 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 168 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி கெபிடல்ஸ் அணியானது ஆரம்பம் முதலே ஓட்டங்கள் பெறுவதில் தடுமாற்றம் காட்டி இருந்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

>> ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான அணிகள் உறுதி

டெல்லி கெபிடல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ரைலி ரூஸோ ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

மறுமுனையில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சிறப்பாக செயற்பட்டிருந்த மதீஷ பத்திரன 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, தீபக் சஹார் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார். போட்டியின் ஆட்டநாயகன் விருது சென்னை சுபர் கிங்ஸ் அணியின் ரவிந்திர ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

சென்னை சுபர் கிங்ஸ் – 167/8 (20) சிவம் டூபே 25(12), மிச்சல் மார்ஷ் 18/3(3), அக்ஷார் படேல் 27/2(4)

டெல்லி கெபிடல்ஸ் – 140/8 (20) ரைலி ரூஸோ 35(37), மதீஷ பத்திரன 37/2(4), தீபக் சஹார் 28/2(3)

முடிவு – சென்னை சுபர் கிங்ஸ் 27 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<