இந்தியாவுடனான தொடரில் அறிமுகமாகும் 21 வயது ஆஸி. வீரர்

182
Getty Image

இந்தியாவுக்கு எதிராக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள T20i, ஒருநாள் போட்டிக்கான 18 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (29) அறிவித்துள்ளது. 

இதன்படி, இளம் சகலதுறை வீரர் கெமரூன் க்ரீன் மற்றும் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரும் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்

இந்திய தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸி.!

இதில் 33 வயதான சகலதுறை வீரரான மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்

.பி.எல் தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகளில் விளையாடுகிறது

இதில் நவம்பர் 27, 29, டிசம்பர் 2ஆம் திகதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6, 8ஆம் திகதிகளில் T20 போட்டிகளும் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் திகதி டெஸ்ட் தொடரும் ஆரம்பமாகவுள்ளது.  

அவுஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒருநாள், T20 தொடருக்கான அணியை இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அவுஸ்திரேலிய அணியில் துடுப்பாட்ட சகலதுறை வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் மீண்டும் அவுஸ்திரேலிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். .பி.எல் தொடரில் உபாதைக்குள்ளான மிட்செல் மார்ஷுக்குப் பதிலான அவர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Video – LPL தொடரிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள் | Sports Roundup – Epi 137

கடந்த 3 ஆண்டுகளாக அணிக்குள் இடம்பிடிக்க கடுமையாகப் போராடிய ஹென்ரிக்ஸ், பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், T20 தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் ஹென்ரிக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

மறுபுறத்தில் 23 வயதான சகலதுறை வீரரான கெமரூன் க்ரீன் முதல்தடவையாக அவுஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவுஸ்திரேலிய அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

”கெமரூன் க்ரீன் உள்ளூர் போட்டித் தொடரில் மேற்கு அவுஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடியதால் அவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

எனவே, அவுஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள கேமரூன் தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

பிக்பாஷ் தொடரிலிருந்து வெளியேறும் ஏ.பி.டி. வில்லியர்ஸ்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் கிரேக் சேப்பல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரிக்கி பொண்டிங்கிற்குப் பிறகு, நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கெமரூன் க்ரீன் என்று தெரிவித்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, காயம் காரணாக .பி.எல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய மிட்செல் மார்ஷ், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவுஸ்திரேலிய அணியில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அவுஸ்திரேலிய ஒருநாள், T20 அணி விவரம் 

ஆரோன் பிஞ்ச் (தலைவர்), சீன் அபாட், அஸ்டன் அகார், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ் (துணைத் தலைவர்), கெமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசல்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபுஷேன், க்ளென் மெக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சார்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மெத்யூ வேட், டேவிட் வோர்னர், ஆடம் சம்பா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<