இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் இலங்கை கிரிக்கெட்டின் யாப்பில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் சம்பியன்களாக ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்<<
இலங்கை கிரிக்கெட் யாப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்களுக்கு இன்று (20) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக பொதுக்கூட்டத்தின் போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய யாப்பு மாற்றங்களில் முக்கிய விடயமாக தீர்மானங்களின் போது வாக்களிக்கும் உரிமை 147 உறுப்பினர்களில் இருந்து 60 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நிதி முகாமை சார்ந்த விடயங்களில் வெளிப்படைத்தன்மையினை பேணுவதனை உறுதிப்படுத்துவதும் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட்ட மற்றைய முக்கிய விடயமாக மாறுகின்றது.
யாப்பு மாற்றங்களுக்கு மேலதிகமாக 2025ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக தேர்தல்கள் குழுவினை நியமிக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டத்தின் போது இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி மலானி குணரட்ன தலைமையிலான நான்கு பேர் அடங்கிய தேர்தல் குழு 2025ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக தேர்தல்களை முகாமை செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<