ILT20 அணியின் தலைவராகும் மொயின் அலி

325

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச லீக் T20 (ILT20) தொடரில் பங்கேற்கவுள்ள சார்ஜா வோரியர்ஸ் அணியின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரரான மொயின் அலி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளருக்கு உபாதை

மொயின் அலி சார்ஜா வோரியர்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட விடயத்தினை அதன் அணி நிர்வாகமானது உறுதிப்படுத்தப்படுத்தியிருக்கின்றது.

தனது புதிய தலைமைப் பொறுப்பு குறித்து கருத்து வெளியிட்ட மொயின் அலி, உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் அரங்குகளில் ஒன்றினைக் கொண்டிருக்கும் சார்ஜா நகரினை பிரதிநிதித்துவம் செய்யும் சார்ஜா வோரியர்ஸ் அணியினை வழிநடாத்துவது தனக்கு கௌரவமாகவும் பெருமையாகவும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை சார்ஜா வோரியர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான போல் பேப்ரஸ் (Paul Fabrace) நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அத்துடன் சார்ஜா வோரியர்ஸ் அணி அதன் மேலதிக பயிற்சியாளர் குழாம் தொடர்பிலான அறிவிப்பினையும் வெளியிட்டிருக்கின்றது. அதன்படி அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்தினைச் சேர்ந்த மெதிவ் மெய்னார்ட்டும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக இந்தியாவினைச் சேர்ந்த G. ஜெயக்குமாரும் செயற்படவிருக்கின்றனர்.

இவர்கள் தவிர சார்ஜா வோரியர்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக ராஜேஷ் சர்மாவும், பிரதான விடயங்களுக்குரிய பொறுப்பு (Chief Operation Officer) அதிகாரியாக K. வைன்கங்காரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

சரித் அசலன்கவின் ஆட்டத்தோடு ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை

இதேவேளை ILT20 லீக் தொடரின் முதல் பருவத்திற்கான போட்டிகள் 2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 13ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<