டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி

India vs Sri Lanka 2022

129

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்களை கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கை அணிக்குத் திரும்பிய டிக்வெல்ல

முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணிசார்பாக விராட் கோஹ்லி தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றார். அதன்படி, இந்திய அணிசார்பாக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12வது இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், இன்றைய ஆட்டநேரத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த விராட் கோஹ்லி 38 ஓட்டங்களை பெற்றிருந்த போது, 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

விராட் கோஹ்லி 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை 169 இன்னிங்ஸ்களில் கடந்துள்ளதுடன், 27 சதங்களையும் விளாசியுள்ளார். இதில், வேகமாக 8000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில் 5வது இடத்தையும் பிடித்துக்கொண்டார்.

சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லக்ஷ்மன், சுனில் கவாஸ்கர், வீரேந்திர ஷெவாக் மற்றும் ராஹுல் டிராவிட் ஆகியோர் இதற்கு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதேவேளை, சர்வதேச ரீதியில் 8000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த 33வது வீரராகவும் விராட் கோஹ்லி பதிவாகினார்.

எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு எதிரான இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 45 ஓட்டங்களுடன் விராட் கோஹ்லி ஆட்டமிழந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<