இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ்

448
Sri Lanka coaching staff finalized

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழாத்தில் இடம்பெறவுள்ளவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.

>> இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக நவீட் நவாஸ்

பங்களாதேஷிற்கு மே மாத ஆரம்பத்தில் செல்லவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கே, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.

இந்த டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் மற்றும் புதிய உதவிப் பயிற்சியாளர் நவீட் நவாஸ் ஆகியோரின் ஆளுகைக்குள் வரவிருக்கும் நிலையில், இவர்களுக்கு மேலதிக உதவியாக வரவிருப்பவர்களின் விபரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதன்படி ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டிருந்த பியால் விஜேதுங்க பங்களாதேஷ் தொடரிலும் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட, சமிந்த வாஸ் வேகப் பந்துவீச்சாளருக்கான பொறுப்பினை எடுத்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார் தனன்ஞய டி சில்வா

மறுமுனையில் மனோஜ் அபேவிக்கிரம பங்களாதேஷ் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராகவும், ஆதரவு பயிற்சியாளராகவும் (Supporting Coach) செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், இந்த பயிற்சியாளர்கள் அடுத்த மூன்று மாதகால காலப்பகுதிக்கு தங்களது பொறுப்புக்களில் தொடர்ந்தும் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<