டில்ருவன் பெரேராவின் சகலதுறை ஆட்டத்தால் தமிழ் யூனியன் கழகத்துக்கு வெற்றி

Major Clubs Limited Over Tournament 2022

88

இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் இன்று (07) நடைபெற்ற போட்டிகளில் தமிழ் யூனியன் மற்றும் Ace Capital கிரிக்கெட் கழகம் என்பன வெற்றிகளைப் பதிவுசெய்தன.

இதில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் கழகம் 140 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் குழு A இல் இதுவரை 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் தமிழ் யூனியன் கழகம் முதலிடத்தைப் பிடித்தது.

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டியில் முதலில் துப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழகம், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களைக் குவித்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் டில்ருவன் பெரேரா 75 ஓட்டங்களையும், சிதார ஹப்புஹின்ன 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

List A போட்டிகளில் கன்னி சதமடித்த டில்ருவன் பெரேரா

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தால் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

தமிழ் யூனியன் கழகத்தின் பந்துவீச்சில் திலும் சுதீர 4 விக்கெட்டுகளையும், டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இது இவ்வாறிருக்க, மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற பதுரெலிய விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் Ace Capital கிரிக்கெட் கழகம் 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 260 (50) – டில்ருவன் பெரேரா 75, சிதார ஹப்புஹின்ன 51, சந்தூஷ் குணதிலக்க 39, சந்துன் மெண்டிஸ் 2/42, ஆகாஷ் சேனாரட்ன 2/46

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 120 (32.1) – சந்துன் மெண்டிஸ் 37, சிதார கிம்ஹான் 28, திலும் சுதீர 4/32, டில்ருவன் பெரேரா 3/35, பிரமோத் மதுஷான் 2/23

முடிவு – தமிழ் யூனியன் கழகம் 140 ஓட்டங்களால் வெற்றி


Ace Capital கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

Ace Capital கழகம் – 234 (47.5) – சகுன லியனகே 61, அமித தாபரே 41, தனுக தாபரே 32, சதுரங்க டி சில்வா 4/65, அனுக் பெர்னாண்டோ 3/48

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 214 (50) – ரனேஷ் சில்வா 49, மலிந்து மதுரங்க 45, சாஹிட் மன்சூர் 43, சானக தேவிந்த 3/41, நிம்சர அத்தரகல்ல 3/49, சிதும் திஸாநாயக்க 2/26

முடிவு – Ace Capital கழகம் 20 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<