Sports Vision மூலம் உங்கள் களத்தடுப்பு திறனை அதிகரியுங்கள்

Vision Care தரும் Sports Vision மூலம் உங்கள் திறனை உயர்த்துங்கள் - பாகம் 3 கிரிக்கெட் (களத்தடுப்பு)

231

களத்தடுப்பு என்பது கிரிக்கெட்டில் அணியொன்றுக்கு வீரர்களை தெரிவு செய்வதில் மிகப்பெரிய பங்கினை வகிக்கும் விடயமாக காணப்படுகின்றது. ஏனெனில், நீங்கள் கிரிக்கெட் அணியொன்றில் சிறந்த துடுப்பாட்டவீரராக அல்லது சிறந்த பந்துவீச்சாளராக இருந்த போதும் மைதானத்தில் இருக்கும் போது உங்களுக்கு களத்தடுப்பின் போது பாரிய பொறுப்பு ஒன்று காணப்படுகின்றது.

ஒரு சிறந்த களத்தடுப்பாளர் திடமாகவும், விடயங்களை விரைவில் அனுமானிக்கும் ஆற்றல் கொண்டவராகவும், திறன்களை வளர்த்துக்கொள்வதில் ஈடுபாடு கொண்ட ஒருவராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், இவற்றினை செய்யாது போயின், நீங்கள் மைதானத்தில் மேற்கொள்ளும் களத்தடுப்பின் போதான தவறுகள் போட்டியினை அடுத்த அணிக்கு தாரை வார்த்துவிட காரணமாக அமைந்துவிடும். 

பார்வைத்திறன் உங்களை சிறந்த பந்துவீச்சாளராக மாற்றுமா??

நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் என்னும் செயற்பாட்டினை நோக்கும் போது அதில் பார்வைத்திறனை அதிகரித்துக்கொள்வதும் பிரதான பங்குவகிக்கின்றது. இங்கே, களத்தடுப்பினை எமது பார்வைத்திறன் மூலம் எவ்வாறு விருத்தி செய்வது என்பது தொடர்பில் நோக்குவோம்.

பார்வைத்திறன் விருத்தியுடன் கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பினை மேம்படுத்த Vision Care நிறுவனத்தின் Sports Vision எந்தவகையில் உதவுகின்றது என்பதனைப் பார்ப்போம்.

Sports Vision என்னும் பதம் விஞ்ஞான ரீதியாக பார்வை ஆற்றல்களை விளையாட்டில் ஈடுபடும் ஒருவர் அதிகரித்துக்கொள்வதற்கு உதவும் விடயங்களை உள்ளடக்கிய முறையொன்றாகக் காணப்படுகின்றது. 

முதலில் விக்கெட்காப்பு அல்லாத களத்தடுப்பில் ஈடுபடும் களத்தடுப்பாளர்கள் தங்களது பார்வைத்திறனை விருத்தி செய்ய அவர்கள் பார்வையுடன் தொடர்புபட்ட எவ்வகையான திறன்களை அதிகரிக்க வேண்டும் என்பதனை நோக்குவோம். 

Visual Clarity (குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பொருளொன்றினை தெளிவாக அவதானிக்கும் திறன்) 

சாதாரண களத்தடுப்பு என்பது கிரிக்கெட் பந்து ஒன்று இருக்கும் இடத்திற்கு நாம் எந்தளவிற்கு விரைவாக செல்வதில் இருக்கின்றது என்பதோடு பந்தின் நிலையான அமைவு குறித்து அறிந்து கொள்வதிலும் காணப்படுகின்றது. இங்கே, மிகவும் குறுகிய நேரத்தில் நடக்கின்ற ஒரு மாற்றம் ஒரு நல்ல களத்தடுப்பாளர் மற்றும் ஒரு மிகச் சிறந்த களத்தடுப்பாளர் என இருவருக்கும் இடையிலான வேறுபாட்டினை காட்டி விடுகின்றது.

கடினமான களத்தடுப்பு இடங்களான Cover மற்றும் Slip போன்ற இடங்களில் களத்தடுப்பு மேற்கொள்ளும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு, மிக மிக குறுகிய நேரமே காணப்படும். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் களத்தடுப்பாளர் ஒருவர் பந்து இருக்கின்ற இடத்தினை ஆரம்பத்திலேயே தெளிவான முறையில் கண்டறிவது அவருக்கு ஒரு சாதக நிலையினை உருவாக்கும். 

இலகுவான முறையில் சொல்லப்போனால், உங்களுக்கு பந்தினை ஆரம்பத்திலேயே தெளிவாக பார்க்க முடிந்து அதற்கு ஏற்றாற்போல் செயலாற்றுவதற்கு முடிந்தால், உங்களால் களத்தடுப்பினை இலகுவாகவும் போதிய நேரத்திற்குள் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

Contrast Sensitivity (வெவ்வேறு ஒளி நிலைமைகளில் பொருட்களை வேறு பிரித்து அவதானிக்கும் திறன்) 

ஆம், நீங்கள் பந்தின் அமைவினை தெளிவாக பார்த்துவிட்டீர்கள், அடுத்து என்ன?? மற்றைய விடயங்களின் செல்வாக்கு இருக்கும் போது பந்து வருகின்ற வேகத்திற்கு ஏற்றவாறு உங்களுக்கு சரியாக அவதானிக்க முடியுமா?? 

மனித மூளை நகரும் பொருள் ஒன்றினை அது இருக்கும் இடத்தினை  சுற்றியுள்ள ஒளியின் அளவினை வைத்து அவதானிக்கின்றது. இதன் காரணமாகவே, துடுப்பாட்டவீரர்கள் தாம் துடுப்பாடும் சந்தர்ப்பத்தில் பந்தினை தெளிவாக அவதானிக்க Sight-Screen என்னும் அமைப்பினை உபயோகம் செய்கின்றனர். 

நீங்கள் மின் விளக்கு ஒளியுடன் ஆடும் போதும், சற்று மந்தமான காலநிலை உள்ள சந்தர்ப்பத்தில் ஆடும் போதும், தெளிவான சூரிய ஒளியின் கீழ் ஆடும் போதும் களத்தடுப்பு மேற்கொண்டால் Contrast Sensitivity தொடர்பான திறனை விருத்தி செய்வது முக்கியமானதாக காணப்படுகின்றது. 

Depth Perception (பொருளின் தூரத்தினையும், அமைவினையும் சரியாக கணிக்கும் திறன்)

இந்த பார்வை ஆற்றல், நீங்கள் இயங்கும் பொருள் ஒன்றினை பிடியெடுப்பு செய்வது தொடர்பானது. இந்த ஆற்றல் கிட்டத்தட்ட உங்கள் மூளையினுள் ஒரு நேரக்கடிகாரம் ஒன்று இயங்கி, அது பந்தினை பிடிக்க வேண்டிய நேரத்தினையும், அதனை விட வேண்டிய நேரத்தினையும் சரியாக குறிப்பிடுவது போன்றதாகும். 

எனவே, இந்த ஆற்றலினை விருத்தி செய்வது உங்களுக்கு பந்து இருக்கின்ற இடத்தினையும், அது இருக்கின்ற தூரத்தினையும் சரியாக கணித்து பந்தினை சரியாக பிடியெடுக்க உதவியாக இருக்கும். 

Sports Vision இல் பயன்படும் பயிற்சி முறைகள்

Eye-hand Coordination  (திருத்தமான கை-கண் ஒருங்கிணைவு)

எந்த விளையாட்டாக இருந்த போதும் இந்த ஆற்றல் மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த ஆற்றலின் போது, உங்களின் கைகள் மற்றும் மூளை இடையிலான தொடர்பானது விருத்தி செய்யப்படுகின்றது.

எனவே, மூளையின் புலனங்கம் பற்றிய செயற்பாடு ஒன்றாக பார்வை காணப்படுவதோடு, இந்த தொழிற்பாட்டின் காரணமாகவே கை-கண் ஒருங்கிணைவும் முக்கியமானதாக காணப்படுகின்றது. எனவே, உங்களது மூளையினை தயார்படுத்துவது கண்-கை இடையிலான இடைத்தொடர்பினை மிகவும் வினைத்திறனாக மாற்றும்.

இனி களத்தடுப்பின் சிறப்பு நிலையாக கருதப்படும் விக்கெட்காப்பு தொடர்பான திறன்களை பார்வைத்திறன் மூலம் அதிகரித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் நோக்குவோம்?

நாம் மேலே பார்த்த பார்வைத்திறன்கள் சாதாரண களத்தடுப்பாளர் ஒருவருக்கு எந்தளவிற்கு தேவையோ? அதே அளவு குறித்த பார்வைத்திறன் ஆற்றல்கள் விக்கெட்காப்பாளர் ஒருவருக்கும் தேவை. எனினும், மேலே குறிப்பிட்டதில் விக்கெட்காப்பாளர்கள் பிரத்தியேகமாக விருத்தி செய்ய வேண்டிய இரண்டு பார்வை ஆற்றல்களும் காணப்படுகின்றன. 

Depth Perception (பொருளின் தூரத்தினையும், அமைவினையும் சரியாக கணிக்கும் திறன்) 

துடுப்பாட்ட வீரருக்கு மிகவும் அருகில் இருக்கும் ஏனைய களத்தடுப்பாளர்கள் போன்று, விக்கெட் காப்பாளராக இருப்பவர்களும் பந்து அருகில் வரும் சந்தர்ப்பம் ஒன்றில் விரைவாக செயற்பட வேண்டும். அதோடு, பந்து துள்ளும் தருணங்களை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டிய கடமைப்பாடும் விக்கெட் காப்பாளர்களுக்கு காணப்படுகின்றது. எனவே, இந்த பார்வை ஆற்றலினை விருத்தி செய்வது முன்னர் குறிப்பிட்ட விடயங்களை வினைத்திறனாக செய்வதற்கு உதவியாக இருக்கும். 

Eye-hand Coordination (திருத்தமான கை-கண் ஒருங்கிணைவு)

சாதாரண களத்தடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு பந்தினை அவதானித்து அது இருக்கும் இடத்திற்கு சென்று பின்னர் அதற்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டிய நிலையொன்று இருக்கும். ஆனால், விக்கெட் காப்பாளர்களின் நிலை அவ்வாறு இல்லை. இங்கே விக்கெட் காப்பாளர்கள் பந்தினை கண்களால் பார்த்து உடனடியாக செயற்படும் நிலை ஒன்றே காணப்படுகின்றது. எனவே, இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் கைகள் மற்றும் கண்கள் இடையிலான இடைத்தொடர்பு மிகவும் சிறந்தமுறையில் பேணப்பட வேண்டியதன் தேவை இருக்கின்றது. 

எனவே, நாம் Sport Vision இல் குறிப்பிட்ட இந்த திறன்களை அதிகரிப்பதன் மூலம் நீங்கள் களத்தடுப்பில் மிகவும் சிறந்த நிலையொன்றினை அடைந்துகொள்ள முடியும். 

இவை தவிர கீழே குறிப்பிடப்படும் பார்வை ஆற்றல்களை அதிகரித்தும் நீங்கள் உங்கள் களத்தடுப்பு ஆற்றல்களை அதிகரித்து கொள்வதற்கும் முடியும்.  

  1. Reaction Time – பார்க்கும் போது தூண்டலுக்கும், துலங்கலுக்கும் இடையிலான நேரம். 
  2. Target Capture – அசையும் இலக்குகளை அவதானித்து செயற்படுதல். 
  3. Near-far quickness – அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருட்களை விரைவாக அவதானிக்கும் திறன். இது ரன்அவுட் ஆட்டமிழப்புக்களை மேற்கொள்ளும் போது உதவியாக இருக்கும்.  
  4. Go/No Go – அழுத்தம் ஏற்படும் போது பார்வை மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து தீர்மானம் எடுக்கும் திறன். இதன் மூலம், பிடியெடுப்பு மற்றும் ரன்அவுட் போன்ற சந்தர்ப்பங்களில் வினைத்திறனாக தீர்மானம் எடுக்க முடியும். 

மேலே குறிப்பிட்ட பார்வை ஆற்றல்களை அதிகரிப்பதற்கான உதவி கொழும்பில் Vision Care இன் Sports Vision பிரிவில் வழங்கப்படுகின்றது. இங்கே உயர்தர தொழில்நுட்ப முறைகளில் ஒன்றாக இருக்கும் Senaptec Strobe Eyewear போன்றவை களத்தடுப்பாளர்களுக்கு மிகவும் உபயோகமாக காணப்படும்.

Senaptec Strobe Eyewear தொழில்நுட்ப முறையில் நாம் பார்க்க வேண்டிய விடயங்கள் கடினமாக்கப்படுவதன் மூலம் மூளை பார்வைத் தகவல்கள் விரைவாக செயன்முறைக்கு உட்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கப்படுவதோடு, விரைவான முறையில் துலங்கல்களை வெளிக்காட்டும் திறனும் விருத்தி செய்யப்படுகின்றது. அதோடு, இதில் கண்-கை ஒருங்கிணைப்பு, Visual Memory, பார்வை நினைவின் ஸ்திரத்தன்மை மற்றும் தீடிர் அதிர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் தன்மை என்பனவும் அதிகரிக்கப்படுகின்றன. 

அது மாத்திரமின்றி Sports Vision இல் பயன்படுத்தப்படும் ஏனைய தொழில்நுட்ப VR தொழில்நுட்ப முறையில் செயற்கையான ஒரு விளையாட்டு நிலைமை ஒன்று உருவாக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகின்றது. 

Sports Vision தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? +94 76 697 628 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் அல்லது கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். உங்களுடன் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு தொடர்பை ஏற்படுத்தும். 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு<<