மேஜர் பிரீமியர் லீக்கின் 2ஆம் நாள் ஆட்டம் மழையால் கைவிடல்

SLC Major League Tournament 2022

89

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்காக இன்று (05) நடைபெறவிருந்த 04 போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டன.

இதனால் இன்று நடைபெறவிருந்த அனைத்துப் போட்டிகளும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இதில் கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம், SSC கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் NCC கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம் ஆகிய கழகங்களுக்கிடையிலான போட்டி பிற்பகல் 3.00 மணியளவில் கைவிடப்பட, சரசென்ஸ் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகளுக்கிடையில் நடைபெறவிருந்த போட்டி இன்று காலை நிறுத்தப்பட்டது.

இதன்படி, மேற்குறிப்பிட்ட நான்கு போட்டிகளின் 3ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை (06) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 67 (33.3) – மாலிந்த புஷ்பகுமார 8/27

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 154/6 (35.5) – கமிந்து மெண்டிஸ் 63*, மினோத் பானுக 38, லசித் அபேரட்ன 21, ரஜீவ வீரசிங்க 3/65, யசிரு ரொட்றிகோ 2/16

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 70/0 (27) – நவிந்து நிர்மால் 35*, சஸித பல்லியகுருகே 29*

NCC கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

NCC கழகம் – 152 (54.2) – லஹிரு உதார 44, சஹன் ஆரச்சிகே 34, சலன டி சில்வா 5/49, பர்வெஸ் ரசூல் 3/38

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 70/2 (15) – மாலிந்த மதுரங்க 36*

SSC கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

SSC கழகம் – 319/6 (70) – நிபுன் தனன்ஜய 117, நுவனிது பெர்னாண்டோ 114, மனோஜ் சரத்சந்திர 51, லஹிரு தியன்த 3/68, நதீர பாலசூரிய 2/35

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<