தெற்காசிய விளையாட்டு விழா குறித்து பாகிஸ்தானில் சிறப்புக் கூட்டம்

139

இந்த வருடம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பல நகரங்களில் நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான திட்டங்களை தயாரிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் லாகூர், சியல்கொட் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களில் தெற்காசிய விளையாட்டு விழாவின் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. 

மெய்வல்லுனர்‌ ‌‌விளையாட்டுக்காக‌ ‌‌தயாராகும்‌ ‌’‌MASS‌’‌ ‌‌ஆன‌ ‌ வேலைத்திட்டம்‌

எவ்வாறாயினும், தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச்செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா கூறுகையில், 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவது பற்றி பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தெற்காசிய விளையாட்டு விழா நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 

கொரோனா நெருக்கடிக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதும், இந்திய-பாகிஸ்தான் உறவுகளை உருவாக்குவதும், பாகிஸ்தானில் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதில் முக்கியமான காரணிகளாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அத்துடன், பாகிஸ்தானில் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியப்படுத்தவில்லை. பிராந்திய நாடுகளுக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் அறிவித்திருக்கவில்லை, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்காசிய விளையாட்டு விழா முன்னதாக 1989 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக நடைபெற்றன. மேலும் அவை 15 விளையாட்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டன. 

ஆனால் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான போட்டி நிகழ்ச்சிகள் 27 விளையாட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

சுகாதார வழிகாட்டல்களுடன் 2021இல் விளையாட்டுப் பயிற்சிகள்

இவற்றில் 25 தெற்காசிய ஒலிம்பிக் குழவினால் முடிவு செய்யப்படும் எனவும், இரண்டு போட்டி நிகழ்ச்சிகள் பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவின் விருப்பப்படி முடிவு செய்யப்படவுள்ளது. 

தெற்காசிய ஒலிம்பிக் குழுவுடன் கலந்தாலோசித்து தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்கும் பணியை பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த சில வாரங்களில் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவும், ஒழுங்கமைக்கவும் ஒரு வழிநடத்தல் குழுவை நியமிக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

அதுமாத்திரமின்றி, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் 3.6 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவுக்கு அந்நாட்டு பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார்.

 >>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<