நிபுன் இரட்டைச் சதமடிக்க; கமிந்து, ரமேஷ் சதமடித்து அபாரம்

SLC Major League Tournament 2022

159

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் எட்டாவது வாரத்துக்கான 12 போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று (08) நிறைவுக்கு வந்தன.

இதில் கோல்ட்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகத்தின் 22 வயது இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிபுன் தனன்ஜய இரட்டைச் சதமடித்து சாதனை படைத்தார். 303 பந்துகளில் 201 ஓட்டங்களைக் குவித்த அவர், முதல்தர கிரிக்கெட் கன்னி இரட்டைச் சதத்துடன், தனது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையப் பதிவு செய்தார். அத்துடன், இம்முறை மேஜர் லீக்கில் இரட்டைச் சதமடித்த 4ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

மறுபுறத்தில் SSC கழகத்துக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் அதிரடி காண்பித்த இளம் வீரர் துனித் வெல்லாலகே 152 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல்தர கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.

இதேவேளை, கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான நிமேஷ் விமுக்தி துடுப்பாட்டத்தில் 107 ஓட்டங்களையும், பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்திருந்தார்.

அதேபோன்று, முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ரமேஷ் மெண்டிஸ் BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் 12 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 119 ஓட்டங்களைப் பெற்றார். இம்முறை மேஜர் லீக்கில் அவரது 3ஆவது சதம் இதுவாகும்.

இதனிடையே, பதுரெலிய கிரிக்கெட் கழகத்தின் அனுக் பெர்னாண்டோ (110), கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் கமிந்து மெண்டிஸ் (122) சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர். இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் கமிந்து மெண்டிஸின் 2ஆவது சதம் இதுவாகும்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் காலி கிரிக்கெட் கழகத்தின் ரகு சர்மா (5/114), களுத்துறை நகர கழகத்தின் சுதார தக்ஷின (6/81), செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தரிந்து ரத்நாயக (6/163) ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

அனைத்துப் போட்டிகளினதும் கடைசி நாள் ஆட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

  • SSC கழகம் – 444/9d (126.2) – நிபுன் தனன்ஜய 201, ரொஷேன் சில்வா 96, மனோஜ் சரத்சந்த்ர 68, துனித் வெல்லாலகே 8/152
  • கோல்ஸ்ட் கிரிக்கெட் கழகம் – 174/5 (44) – தனன்ஜய லக்ஷான் 56, அஞ்சலோ மெதிவ்ஸ் 49*, ஹஷான் துமிந்து 49, நிசல தாரக 2/51

BRC கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

  • BRC கழகம் – 231 (67.1) – லியோ ப்ரான்சிஸ்கோ 53, டிலான் ஜயலத் 38, துஷான் ஹேமன்த 32, திலகரட்ன சம்பத் 20, மிலான் ரத்நாயக 3/55, ரமேஷ் மெண்டிஸ் 3/64, சானுக டில்ஷான் 3/64
  • முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 394 (88.5) – ரமேஷ் மெண்டிஸ் 119, சொஹான் டி லிவேரா 73, அதீஷ திலன்சன 54, துஷான் ஹேமன்த 5/85, திலகரட்ன சம்பத் 2/32, துவிந்து திலகரட்ன 2/79
  • BRC கழகம் – 33/0 (15)

நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் NCC கழகம்

  • நுகேகொட விளையாட்டுக் கழகம் – 371 (109.5) – ருமேஷ் புத்திக 109, ரனித லியனாரச்சி 70, நவீன் பெர்னாண்டோ 50, தில்ஹார பொல்கம்பொல 32, மதீஷ பத்திரன 4/46, லசித் எம்புல்தெனிய 3/117, அஷைன் டேனியல் 2/75
  • NCC கழகம் – 318/5 (52) – நிரோஷன் டிக்வெல்ல 88, கவின் பண்டார 71, சந்துன் வீரக்கொடி 71*, அஹான் விக்ரமசிங்க 55, நவீன் பெர்னாண்டோ 2/43, சமிந்த பண்டார 2/96

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

  • பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 432 (100.4) – அலங்கார அசங்க சில்வா 127, அனுக் பெர்னாண்டோ 110, சலன டி சில்வா 56, ரனேஷ் சில்வா 30, ரஜிந்த புன்சிஹேவா 3/63, திக்ஷில டி சில்வா 3/64, ஸ்வப்னில் குலகலே 2/55
  • சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 196/3 (63) – கசுன் விதுர 68*, ஸ்வப்னில் குகலே 67, லசித் லக்ஷான் 34

காலி கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

  • காலி கிரிக்கெட் கழகம் – 239 (74.2) – சமீன் கன்தனேஆராச்சி 123, கவிந்து எதிரவீர 37, சாலித் பெர்னாண்டோ 34, சகிது விஜேரட்ன 6/46, தினுஷ்க மாலன் 2/42
  • குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 344/7 (100) – சனோஜ் தர்ஷிக 81*, கயான் மனீஷான் 70, தினுஷ்க மாலன் 53, ரகு சர்மா 5/114

களுத்துறை நகர கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

  • களுத்துறை நகர கழகம் – 142 (50.2) – நிபுன கமகே 46, சதீஷ் ஜயவர்தன 29, சச்சித்ர பெரேரா 6/18, இமேஷ் உதயங்க 2/41
  • கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 265 (83.4) – இமேஷ் உதயங்க 79, ரஷ்மிக மதுஷங்க 46, ஹர்ஷ ராஜபக்ஷ 45, சுதார தக்ஷின 6/81, தரிந்து சிறிவர்தன 2/25
  • களுத்துறை நகர கழகம் – 168/9 (52) – மாதவ நிமேஷ் 79*, யொஹான் மெண்டிஸ் 20, இமேஷ் உதயங்க 4/41, சச்சித்ர பெரேரா 3/61

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

  • பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 433 (99.3) – நிமேஷ் விமுக்தி 107, சனுக துலாஜ் 86, அபிஷேக் குப்தா 61, பவன் டி சில்வா 50, சச்சித்ர சேனாநாயக 4/95, டிலங்க அவ்வார்ட் 2/86, நவீன் கவிகார 2/95
  • கடற்படை விளையாட்டுக் கழகம் – 196 (49) F/O – கவிந்து ரணசிங்க 59, அதீஷ நாணயக்கார 39, சஹன் கோசல 22, நிமேஷ் விமுக்தி 5/73, கோஷான் தனுஷ்க 4/70
  • கடற்படை விளையாட்டுக் கழகம் – 89/6 (18) – சஹன் கோசல 25*, கோஷான் தனுஷ்க 3/31, நிமேஷ் விமுக்தி 3/40

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

  • இராணுவ விளையாட்டுக் கழகம் – 212 (47.4) – மஹேஷ் குமார 50, லக்ஷான் எதிரிசிங்க 38, யசோத மெண்டிஸ் 31, ஷிரான் பெர்னாண்டோ 4/75, கவிந்து பத்திரத்னே 3/50, ரவீன் டி சில்வா 2/23
  • தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 200 (54) – நவோத் பரணவிதான 50, ரவிந்து பெர்னாண்டோ 48, அசங்க மனோஜ் 4/81, சீக்குகே பிரசன்ன 2/57
  • இராணுவ விளையாட்டுக் கழகம் – 160/4 (54) – அஷான் ரன்திக 51, பெதும் பொதேஜு 40*, ஷிரான் பெர்னாண்டோ 3/52

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

  • செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 151 (53.3) – லொஹான் டி சொய்ஸா 57, மானல்கர் டி சில்வா 28, ரையன் பெர்னாண்டோ 21, சொனால் தினூஷ 5/22, கமிந்து மெண்டிஸ் 3/27
  • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 481 (113.5) – கமிந்து மெண்டிஸ் 122, மினோத் பானுக 83, அஷான் ப்ரியன்ஜன் 64, லக்ஷான் சந்தகன் 47, தரிந்து ரத்நாயக 6/163, அக்தாப் காதர் 2/44
  • செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 1/0

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

  • ராகம கிரிக்கெட் கழகம் – 499/9d (129.3) – தினெத் திமோத்ய 93, அவிஷ்க தரிந்து 90, நிஷான் மதுஷ்க 64, லஹிரு தெவடகே 70, ஜனித் லியனகே 48, கீத் குமார 2/63, கசுன் மதுஷங்க 2/92, ரஜீவ வீரசிங்க 2/102
  • லங்கன் கிரிக்கெட் கழகம் – 122/3 (42) – கசுன் அபேரட்ன 54, கீத் குமார 33*, ஜனித் லியனகே 2/18

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

  • விமானப்படை விளையாட்டுக் கழகம் – 273 (106.3) – சச்சின் ஜயவர்தன 59, ஆதித்ய சிறிவர்தன 51, கசுன் ஏகநாயக 48, திலீப ஜயலத் 3/21, ஹஸ்னைன் பொக்ஹாரி 3/55
  • ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 213/8 (71) – சரித குமாரசிங்க 50, கஜித கொடுவேகொட 44*. கயான் சிறிசோம 3/82, லசந்த ருக்மால் 2/46

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

  • சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 235 (82.2) – சிதார கிம்ஹான் 61, நிபுன் கருணாநாயக 74, துஷான் விமுக்தி 60, உபுல் இந்திரசிறி 4/63, சனுர பெர்னாண்டோ 3/44
  • நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 241 (80.4) – அஞ்சலோ ஜயசிங்க 79, கெவின் அல்மேதா 75, மொஹமட் டில்ஷாட் 3/55, கவின் டில்ஷான் 3/60, துஷான் விமுக்தி 2/72
  • சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 58/2 (17) – சிதார கிம்ஹான் 22, ஹஷேன் ராமநாயக 20*

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<