டி20 தொடரிலிருந்து மார்டின் குப்டில் வெளியேற்றம்

259
India today

இந்திய அணியுடனான டி20 தொடரிலிருந்து உபாதையால் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் மார்டின் குப்டில் நீக்கப்பட்டு சகலதுறை வீரரான ஜிம்மி நேசம் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா இந்தியா அணிக்கும் நியூஸிலாந்து அணிக்குமிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் தொடரான ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அதனை இந்திய அணி 4-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.  

தொடர் தோல்வியால் ஒருநாள் தரவரிசையில் நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவு

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ….

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான முழுமையான பயிற்சிகளில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த டி20 தொருக்கான இரு அணிகளினது குழாம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியூஸிலாந்து அணியினுடைய குழாமில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்தியநியூஸிலாந்து அணிகளுக்கிடையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியின் போது நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மார்டின் குப்டில் முதுகுப்பகுதில் காயம் ஏற்பட்டு உபாதைக்குள்ளார். இதனால் அவருக்கு ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்திய அணியுடனான டி20 சர்வதேச தொடருக்கான நியூஸிலாந்து அணியில் மார்டின் குப்டில் இடம்பெற்றிருந்தார். இருந்தாலும் அவர் இன்னும் உபாதையிலிருந்து மீளாததன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளார்.

இவரது இடத்திற்கு அண்மைக்காலமாக சகலதுறையில் பிரகாசித்து வரும் 28 வயதுடைய வீரரான ஜிம்மி நேசம் டி20 குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

2012ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்ற ஜிம்மி நேசம் இதுவரையில் 15 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 122 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

பிக்பேஷ் டி20 லீக் தொடரிலிருந்து மெக்கலம் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான பிரெண்டன் மெக்கல்லம் …

7 வருடங்களுக்கு முன்னர் இவர் சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தாலும் நீண்ட காலமாக நியூஸிலாந்து அணிக்காக ஆடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மார்டின் குப்டிலினுடைய ஓய்வு தொடர்பில் நியூஸிலாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான கேரி ஸ்டீட் குறிப்பிடுகையில், ‘இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட உபாதையிலிருந்து இன்னும் அவர் முழுமையாக குணமடையவில்லை. அதனாலேயே அவர் நீக்கப்பட்டு அண்மைக்காலமாக பிரகாசித்துவரும் சகலதுறை வீரர் நேசம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.’

இருந்தாலும் அடுத்து ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான தொடரில் விளையாடுவதற்கு மார்டின் குப்டில் குணமடைந்து விடுவார் என நம்புகின்றேன்.’ என தெரிவித்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டி இன்று (06) வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.

மாற்றத்தின் பின்னரான நியூஸிலாந்து குழாம்.

கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டக் ப்ரெஸ்வெல், கொலின் டி கிரான்ட்ஹொம், லோக்கி பேர்கஸன் (இரண்டு போட்டிகளுக்கு hத்திரம்), ஜிம்மி நேசம், ஸ்கொட் குக்லெயின், டேரைல் மிச்செல், கொலின் முன்ரோ, மிச்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட், இஷ் சோதி, டிம் செளத்தி, ரொஸ் டெய்லர், ப்லைர் டிக்னெர் (இறுதி போட்டிக்கு மாத்திரம்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<