மேஜர் பிரீமியர் லீக்கில் சுழலில் மிரட்டிய லசித், பிரபாத், மாலிந்த

SLC Major League Tournament 2022

226

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான 04 போட்டிகள் நேற்று (06) நிறைவுக்கு வந்தன.

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரும், NCC கழகத்துக்காக விளையாடி வருகின்ற லசித் எம்புல்தெனிய பதுரெலிய கழகத்துக்கு எதிரான போட்டியில் 76 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மறுபுறத்தில் பதுரெலிய கழகத்துக்காக விளையாடி வருகின்ற இந்திய வீரரான பர்வெஸ் ரஸுல் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியிருந்தார்.

லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கும், கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கும் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இதில் கொழும்பு கழகத்துக்காக பந்துவீச்சில் பிரகாசித்த மாலிந்த புஷ்பகுமார, முதல் இன்னிங்ஸில் 27 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, இலங்கை டெஸ்ட் அணியின் புதிய சுழல் நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கின்ற பிரபாத் ஜயசூரிய, பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 40 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் 2ஆவது இன்னிங்ஸில் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் SSC கழகத்துக்காக பிரபாத் ஜயசூரிய பந்துவீச்சில் அசத்த, துடுப்பாட்டத்தில் நிபுன் தனன்ஜய (117) மற்றும் நுவனிது பெர்னாண்டோ (114) ஆகிய இருவரும் சதமடித்து பலம் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 67 (33.3) – மாலிந்த புஷ்பகுமார 8/27

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 196/8 (40.4) – கமிந்து மெண்டிஸ் 72, மினோத் பானுக 38, லசித் அபேரட்ன 21, யசிரு ரொட்றிகோ 3/33, ரஜீவ வீரசிங்க 3/89

லங்கன் கிரிக்கெட் கழகம் – 131/9 (62) – தேஷான் டயஸ் 50, கசுன் அபேரட்ன 21, மாலிந்த புஷ்பகுமார 4/59, விஷ்வ பெர்னாண்டோ 3/30

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 70/0 (27) – நவிந்து நிர்மால் 35*, சஸித பல்லியகுருகே 29*

NCC கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

NCC கழகம் – 152 (54.2) – லஹிரு உதார 44, சஹன் ஆரச்சிகே 34, சலன டி சில்வா 5/49, பர்வெஸ் ரசூல் 3/38

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 153 (49) – மாலிந்த மதுரங்க 37, அநுக் பெர்னாண்டோ 23, ரனேஷ் சில்வா 22*, லசித் எம்புல்தெனிய 7/76

NCC கழகம் – 151/9d (41) – கவின் பண்டார 42, ஜொஹான்னே டி சில்வா 34, பர்வெஸ் ரஸுல் 5/39, சலன டி சில்வா 4/73

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

SSC கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

SSC கழகம் – 319/6d (70) – நிபுன் தனன்ஜய 117, நுவனிது பெர்னாண்டோ 114, மனோஜ் சரத்சந்திர 51, லஹிரு தியன்த 3/68, நதீர பாலசூரிய 2/35

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 140 (46.5) – உதய் கௌல் 36, பிரபாத் ஜயசூரிய 7/40, கவிந்து நதீஷான் 2/36

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 66/7 (21) – சமன் குமார 17, பிரபாத் ஜயசூரிய 4/36

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<