டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் அஷார் அலி!

England tour of Pakistan 2022

192

பாகிஸ்தான் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் அஷார் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக சனிக்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டியுடன் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.

>> சுபர் ஜயண்ட்ஸ் அணியில் விளையாடவுள்ள அகில தனன்ஜய

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான அஷார் அலி யூனுஸ் கான், ஜாவிட் மியாண்டட், இன்ஷமாம் உல் ஹக் மற்றும் மொஹமட் யூசுப் ஆகியோருக்கு அடுத்தப்படியாக டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவராக உள்ளார்.

இவர் 96 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதுடன், 42.49 என்ற சராசரியில் 7097 ஓட்டங்களை குவித்துள்ளார்.

>> Abu Dhabi T10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்கள்!

தன்னுடைய ஓய்வு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அஷார் அலி, “எனது நாட்டுக்காக முதற்தர கிரிக்கெட்டில் ஆடியதை நான் பெருமையாக கருதுகிறேன். இதுவொரு கடினமான முடிவாக இருந்தாலும், தற்போது ஓய்வுபெறுவதுதான் சரியான தருணமாக இருக்கும் என உணருகின்றேன்” என்றார்.

அஷார் அலி கடந்த 2010ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றக்கொண்டதுடன், 19 சதம் மற்றும் 34 இரட்டைச்சதங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<