தீஷன் விதுசனின் 10 விக்கெட்; முவர்ஸ் கழகத்துக்கு ஹெட்ரிக் வெற்றி

SLC Major League Tournament 2022

169

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான 07 போட்டிகள் இன்று (04) நிறைவுக்கு வந்தன.

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் கண்டி சுங்க கழகத்துக்கு எதிரான போட்டியில் முவர்ஸ் விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 108 ஓட்டங்களால் வெற்றயீட்டியது. இதன் மூலம் இம்முறை முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 3ஆவது வெற்றியை அந்த அணி பதிவுசெய்தது.

இதனிடையே, குறித்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட யாழ். வீரர் தீஷன் விதுசன் முதல் இன்னிங்ஸில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அச்த்தியிருந்தார்.

இதன்படி, இம்முறை மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள தீஷன் விதுசன், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதனிடையே, இன்று நிறைவடைந்த போட்டியில் BRC கழகம் 6 விக்கெட்டுகளால் காலி கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியது. இதில் BRC கழகத்துக்காக துஷான் ஹேமந்த பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும், துடுப்பாட்டத்தில் 69 ஓட்டங்களையும் குவித்து சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார்.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் ஆரம்பிக்க முடியாமல் போன மேலும் மூன்று போட்டிகள் இன்று (04) ஆரம்பமாகின.

இதில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகத்தின் நிபுன் தனன்ஜய (117) மற்றும் நுவனிது பெர்னாண்டோ (114) ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியிருந்தனர்.

அதேபோன்று, லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் மாலிந்த புஷ்பகுமார 27 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளையும், NCC கழகத்துக்கு எதிரான போட்டியில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்தின் சலன டி சில்வா 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 116 (43.4) – ரஷ்மிக மதுஷங்க 47*, ருவீன் பொன்சேகா 23, தீஷன் விதுசன் 5/44, சானுக டில்ஷான் 3/46

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 377/6d (104) – தினுக டில்ஷான் 108, பசிந்து சூரியபண்டார 85, பபசர வதுகே 59, ரமேஷ் மெண்டிஸ் 53, மெதுஷான் திலின 3/74, அயேஷ் ஹர்ஷன 2/81

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 153/9 (52) – சானக விஜேசிங்க 42, சலிந்து பதிரன 32, சமித ரங்க 25, ருவீன் பொன்சேகா 23, தீஷன் விதுசன் 5/35, ரமேஷ் மெண்டிஸ் 3/77

முடிவு – முவர்ஸ் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 108 ஓட்டங்களால் வெற்றி

Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 151 (55.4) – ப்ரமோத் ஹெட்டிவத்தே 69, சச்சிந்து கொலம்பகே 24*, கவிந்து பத்திரத்னே 3/14, டில்ருவன் பெரேரா 3/44, திலும் சுதீர 2/57

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 290 (82.4) – ரவிந்து பெர்னாண்டோ 73*, கமேஷ் நிர்மால் 55, ரொன் சந்த்ரகுப்த 43, இசுரு உதான 34, சச்சிந்து கொலம்பகே 3/87

Ace Capital கிரிக்கெட் கழகம் – 216/7 (80.2) – லசித் குரூஸ்புள்ளே 52 நினாத் கதம் 44, ஓஷத பெர்ணான்டோ 31, டில்ருவன் பெரேரா 3/44

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

காலி கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 178 (56.2) – யசோத லங்கா 42, கவிந்து எதிரிவீர 33, சமீன் கனதெனஆரச்சி 31, சுபானு ராஜபக்ஷ 27, ரஜித் ப்ரியான் 23, துஷான் ஹேமந்த 7/65, லஹிரு சமரகோன் 2/37

BRC கழகம் – 255 (67.2) – லஹிரு சமரகோன் 70, துஷான் ஹேமந்த 69, துவிந்து திலகரட்ன 27*, சந்துன் மதுஷங்க 5/45, டில்ஷான் காஞ்சன 2/14

காலி கிரிக்கெட் கழகம் – 149 (40.3) – டில்ஷான் காஞ்சன 52, யசோத லங்கா 33, ரஜித ப்ரியன் 23, திலகரட்ன சம்பத் 5/63, துஷான் ஹேமந்த 4/54

BRC கழகம் – 75/4 (18.2) – திலகரட்ன சம்பத் 47, சந்துன் மதுஷங்க 3/41

முடிவு – BRC கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 353 (109.5) – புலின தரங்க 81, ரவீன் யசஸ் 77*, கசுன் விதுர 61, கௌரவ் ஜாதர் 52, திமிர இருஷிக 39, கசுன் ஏகநாயக்க 3/75, லஹிரு ஜயகொடி 2/49

கடற்படை விளையாட்டுக் கழகம் – 266 (111.3) – மாலிங்க மாலிகப்சே 48, அதீஷ நாணயக்கார 43, திமிர இருஷிக 3/68, கேஷர நுவந்த 2/32, ஜதார் 2/47

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 51/0 (8) – கசுன் விதுர 38*

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

இராணுவ கிரிக்கெட் கழகம் – 150 (65.2) – கிஹான் கோரளகே 37, ஷெஹான் பெர்னாண்டோ 28, பெதும் பொதேஜு 23, சஹன் நாணயக்கார 3/20, அரவிந்த ப்ரேமரத்ன 3/47

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 263 (88.2) – ரனித லியனாரச்சி 83, அரவிந்த ப்ரேமரட்ன 45, டில்ஹார பொல்கம்பொல 43, கௌமால் நாணயக்கார 5/100, அசங்க மனோஜ் 3/66

இராணுவ கிரிக்கெட் கழகம் – 257/4 (80) – லக்ஷான் எதிரிசிங்க 134, ஹிமாஷ லியனகே 35*, துலின டில்ஷான் 32, சஹன் நாணயக்கார 2/44

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 274 (73.5) – விஷாத் ரந்திக 92*, தனன்ஜய லக்ஷான் 41, சங்கீத் குரே 28, தரிந்து ரத்னாயக்க 7/116

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 240 (105.1) – மானல்கர் டி சில்வா 63, சச்சித ஜயதிலக 41, விமுத் சப்னக 40, சாமிக எதிரிசிங்க 39, சங்கீத் குரே 3/65, முதித லக்ஷான் 3/16, துனித் வெல்லாலகே 2/56

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 167/6 (51.1) – தனன்ஜய லக்ஷான் 43, சலின் டி மெல் 29, சங்கீத் குரே 29, தரிந்து ரத்நாயக்க 4/65, சாமிக எதிரிசிங்க 2/65

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 326/9d (110.2) – அவிஷ்க தரிந்து 103*, நிஷான் மதுஷ்க 62, சஷிக துல்ஷான் 50, ஜனித் லியனகே 35, சகிது விஜேரட்ன 4/104

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 156 (45.3) – முஹம்மத் மொஹ்சின் 57, லஹிரு அபேசிங்க 35, முதித பிரேமதாச 26, சன்ஜுல பண்டார 3/28, சஷிக துல்ஷான் 3/46, இஷான் ஜயரட்ன 2/17

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 115/7 (29) – தனுஷ்க தர்மிசிறி 46, கயான் மனீஷன் 27, முஹம்மத் மொஹ்சின் 21, சஷிக துல்ஷான் 3/18, கல்ஹார சேனாரட்ன 2/40

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 228 (101.4) – ஜடின் சக்ஷேனா 85, அமோத விதானபத்திரன 42, உமேஷ் லக்ஷான் 30, சானக கோமசாரு 5/79

பளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 199/5 (55) – கஜித கொடுவேகொட 58, சரித குமாரசிங்க 48, மாதவ வர்ணபுர 25

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 67 (33.3) – மாலிந்த புஷ்பகுமார  8/27

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 154/6 (35.5) – கமிந்து மெண்டிஸ் 63*, மினோத் பானுக 38, லசித் அபேரட்ன 21, ரஜீவ வீரசிங்க 3/65, யசிரு ரொட்றிகோ 2/16

NCC எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

NCC கழகம் – 152 (54.2) – லஹிரு உதார 44, சஹன் ஆரச்சிகே 34, சலன டி சில்வா 5/49, பர்வெஸ் ரசூல் 3/38

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 70/2 (15) – மாலிந்த மதுரங்க 36*

SSC கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

SSC கழகம் – 319/6 (70) – நிபுன் தனன்ஜய 117, நுவனிது பெர்னாண்டோ 114, மனோஜ் சரத்சந்திர 51, லஹிரு தியந்த 3/68, நதீர பாலசூரிய 2/35

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<