மேஜர் பிரீமியர் லீக்கில் சதமடித்த தினுக, அவிஷ்க

158

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான 07 போட்டிகளின் 2ஆவது நாள் ஆட்டள் இன்று (27) நிறைவுக்கு வந்ததுடன், இன்றைய தினம் 2 சதங்களும், 13 அரைச் சதங்களும் பதிவாகின.

இதில் கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தினுக டில்ஷான் சதமடித்து அசத்த, குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தின் அவிஷ்க தரிந்து சதம் அடித்து அசத்தினார்.

22 வயதான தினுக டில்ஷானும், 20 வயதான அவிஷ்க தரிந்துவும் முதல்தரப் போட்டிகளில் தங்களுடைய 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தனர்.

முவர்ஸ் கழகத்துக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தீஷன் விதுசன்

பந்துவீச்சை பொறுத்தமட்டில் BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் காலி கிரிக்கெட் கழகத்தின் சந்துன் மதுஷங்கவும், அதே போட்டியில் BRC கழகத்தின் திலகரட்ன சம்பத் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

அதுமாத்திரமின்றி, குறித்த போட்டியில் BRC கழகத்தின் துஷான் ஹேமந்த, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்ததோடு, முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அந்த அணிக்காக 69 ஓட்டங்களையும் குவித்து சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார்.

அதேபோன்று, நுகேகொட விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் இராணுவ கிரிக்கெட் கழகத்தின் கௌமால் நாணயக்கார 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 116 (43.4) – ரஷ்மிக மதுஷங்க 47*, ருவீன் பொன்சேகா 23, தீஷன் விதுசன் 5/44, சானுக டில்ஷான் 3/46

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 377/6d (104) – தினுக டில்ஷான் 108, பசிந்து சூரியபண்டார 85, பபசர வதுகே 59, ரமேஷ் மெண்டிஸ் 53, மெதுஷான் திலின 3/74, அயேஷ் ஹர்ஷன 2/81

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 96/5 (36) – சமித ரங்க 25, ருவீன் பொன்சேகா 23, தீஷன் விதுசன் 2/04, ரமேஷ் மெண்டிஸ் 2/52

Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 151 (55.4) – ப்ரமோத் ஹெட்டிவத்தே 69, சச்சிந்து கொலம்பகே 24*, கவிந்து பத்திரத்னே 3/14, டில்ருவன் பெரேரா 3/44, திலும் சுதீர 2/57

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 290 (82.4) – ரவிந்து பெர்னாண்டோ 73*, கமேஷ் நிர்மால் 55, ரொன் சந்த்ரகுப்த 43, இசுரு உதான 34, சச்சிந்து கொலம்பகே 3/87

Ace Capital கிரிக்கெட் கழகம் – 72/2 (13) – லசித் குரூஸ்புள்ளே 34*, ஓஷத பெர்ணான்டோ 31, டில்ருவன் பெரேரா 2/01

காலி கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 178 (56.2) – யசோத லங்கா 42, கவிந்து எதிரிவீர 33, சமீன் கனதெனஆரச்சி 31, சுபானு ராஜபக்ஷ 27, ரஜித் ப்ரியான் 23, துஷான் ஹேமந்த 7/65, லஹிரு சமரகோன் 2/37

BRC கழகம் – 255 (67.2) – லஹிரு சமரகோன் 70, துஷான் ஹேமந்த 69, துவிந்து திலகரட்ன 27*, சந்துன் மதுஷங்க 5/45, டில்ஷான் காஞ்சன 2/14

காலி கிரிக்கெட் கழகம் – 149 (40.3) – டில்ஷான் காஞ்சன 52, யசோத லங்கா 33, ரஜித ப்ரியன் 23, திலகரட்ன சம்பத் 5/63, துஷான் ஹேமந்த 4/54

BRC கழகம் – 35/3 (12) – திலகரட்ன சம்பத் 21*, சந்துன் மதுஷங்க 2/13

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 353 (109.5) – புலின தரங்க 81, ரவீன் யசஸ் 77*, கசுன் விதுர 61, கௌரவ் ஜாதர் 52, திமிர இருஷிக 39, கசுன் ஏகநாயக்க 3/75, லஹிரு ஜயகொடி 2/49

கடற்படை விளையாட்டுக் கழகம் – 157/3 (51) – மாலிங்க மாலிகப்சே 48, அதீஷ நாணயக்கார 43, லஹிரு ஜயகொடி 20*

இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

இராணுவ கிரிக்கெட் கழகம் – 150 (65.2) – கிஹான் கோரளகே 37, ஷெஹான் பெர்னாண்டோ 28, பெதும் பொதேஜு 23, சஹன் நாணயக்கார 3/20, அரவிந்த ப்ரேமரத்ன 3/47

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 263 (88.2) – ரனித லியனாரச்சி 83, அரவிந்த ப்ரேமரட்ன 45, டில்ஹார பொல்கம்பொல 43, கௌமால் நாணயக்கார 5/100, அசங்க மனோஜ் 3/66

இராணுவ கிரிக்கெட் கழகம் – 70/2 (24) – துலின டில்ஷான் 32, லக்ஷான் எதிரிசிங்க 21*

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 274 (73.5) – விஷாத் ரந்திக 92*, தனன்ஜய லக்ஷான் 41, சங்கீத் குரே 28, தரிந்து ரத்னாயக்க 7/116

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 213/9 (94) – மானல்கர் டி சில்வா 63, விமுத் சப்னக 40, சாமிக எதிரிசிங்க 39, சங்கீத் குரே 3/65, முதித லக்ஷான் 2/12, துனித் வெல்லாலகே 2/48

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 326/9d (110.2) – அவிஷ்க தரிந்து 103*, நிஷான் மதுஷ்க 62, சஷிக துல்ஷான் 50, ஜனித் லியனகே 35, சகிது விஜேரட்ன 4/104

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 9/0 (3)

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 155/5 (72) – ஜடின் சக்ஷேனா 60*, அமோத விதானபத்திரன 42, உமேஷ் லக்ஷான் 30, சானக கோமசாரு 2/45

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<