இலங்கை சார்பாக அதிவேக ஒருநாள் சதம் குவித்த சந்துன் வீரக்கொடி

184

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சந்துன் வீரக்கொடி BRC கழகத்துடன் இன்று நடைபெற்ற முதல்தர ஒருநாள் போட்டியில் 38 பந்துகளில் சதமடித்து இலங்கை சார்பாக முதல்தர ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரராக புதிய மைல்கல்லை எட்டினார்.

இதற்குமுன் ஒருநாள் போட்டிகளில் இலங்கை விமானப்படை கழகத்துக்காக எதிராக பானுக ராஜபக்ஷ 42 பந்துகளில் இலங்கை சார்பாக அதிவேக சதமடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே BRC கழகத்துக்கு எதிராக 24 பந்துகளில் தனது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த சந்துன் வீரக்கொடி, அடுத்த 15 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 31 பந்துகளில் சதமடித்தே சர்வதேச போட்டியொன்றில் வீரரொருவர் பெற்றுக் கொண்ட அதிவேக சதமாகும். அதேபோல சர்வதேசப் போட்டியல்லாத ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் சமர்செட் கழகத்தின் கிரெஹம் ரோஸ் 36 பந்துகளில் அதிவேக சதமடித்துள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, கடந்த நவம்பர் மாதம் ரிவர் ஐலன்ட் கழகத்துக்கு எதிராக ஜமைக்காவின் ரோமன் பவெல் 38 பந்துகளில் சதமடித்து அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில், 2005-06 பருவகாலத்திற்கான உள்ளூர் முதல்தர ஒருநாள் போட்டியில் குருநாகல் இளையோர் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி 12 பந்துகளில் அரைச்சதமடித்த கௌஷல்ய வீரரத்ன கழகமட்ட முதல்தரப் போட்டியில் அதிவேக சாதனை அடித்த வீரராக இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், ஒருநாள் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிவேக சதமடித்த சனத் ஜயசூரியவின் சாதனையை 23 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார். 

நீர்கொழும்பு அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த டில்ஷான் முனவீர

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில்…..

முன்னதாக 1996ஆம் ஆணடு சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கர் கிண்ண முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 45 பந்துகளில் சனத் ஜயசூரிய சதமடித்திருந்தார். அந்த சாதனையை சந்துன் வீரக்கொடி தற்போது முறியடித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கீழ் இன்று (19) பதினொரு போட்டிகள் நடைபெற்றன. 

இதில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் குருநாகல் இளையோர் கழகங்களுக்கிடையிலான போட்டி, ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் பாணந்துறை விளையாட்டு கழகங்களுக்கிடையிலான போட்டி, சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான போட்டி என்பன சீரற்ற காலநிலை காரணமாக முதல் இன்னிங்ஸ் மாத்திரம் விளையாடி கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டிகளில் SSC கழகத்தின் சந்துன் வீரக்கொடி மற்றும் NCC கழகத்தின் உபுல் தரங்க ஆகியோர் சதங்களைக் குவிக்க, NCC கழகத்தின் லஹிரு உதார, அஞ்செலோ பெரேரா, கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் அஷான் ப்ரியன்ஜன், மினோத் பானுக, ரொன் சந்திரகுப்த மற்றும் ராகம கிரிக்கெட் கழகத்தின் உதார ஜயசுந்தர, ரொஷேன் சில்வா ஆகியோர் அரைச் சதங்களை அடித்து தங்களது அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தனர். 

BRC கழகம் எதிர் SSC கழகம் 

கொழும்பு BRC மைதானாத்தில் நடைபெற்ற இப்போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக அணிக்கு 49 ஓவர்களைக் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 112 ஓட்டங்களுக்கு சுருண்டனர்.

இலங்கை அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லசித், லஹிரு!

கராச்சியில் இன்று (19) ஆரம்பமாகியுள்ள…..

பந்துவீச்சில் SSC கழக வீரர் தரிந்து ரத்னாயக்க 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

113 என்ற இலகுவான ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SSC கழகம் சந்துன் வீரக்கொடி ஆட்டமிழக்காது சதம் கடந்து பெற்றுக் கொண்ட 101 ஓட்டங்களுடன் விக்கெட் இழப்பின்றி இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

துடுப்பாட்டத்தில் அசத்திய 26 வயதுடைய இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சந்துன் வீரக்கொடி, 39 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டழிக்காது 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன், இலங்கையின் முதல்தர ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதத்தைப் பதிவுசெய்த வீரராகவும் சாதனை படைத்தார். 

போட்டியின் சுருக்கம்

BRC – 112 (37.2) – ரமிந்த விஜேசூரிய 25, சவின் குணசேகர 23, தரிந்து ரத்னாயக்க 5/24, சச்சித்ர சேனாநாயக்க 2/04

SSC – 113/0 (9.2) – சந்துன் வீரக்கொடி 101*

முடிவு – SSC கழகம் 10 விக்கெட்டுக்களால் வெற்றி 


NCC எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

NCC கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்தின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தேசிய அணி வீரர்களைக் கொண்ட NCC கழகம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் அசத்திய உபுல் தரங்க சதம் கடந்து 119 ஓட்டங்களையும், லஹிரு உதார (63) மற்றும் அஞ்செலோ பெரேரா (53) அரைச் சதம் கடந்து வலுச்சேர்த்தனர். 

இம்முறை போட்டித் தொடரில் உபுல் தரங்க பெற்றுக் கொண்ட இரண்டாவது சதம் இதுவாகும்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி சுங்க கழகம் 81 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சுருக்கம்

NCC – 279/7 (45) – உபுல் தரங்க 119, லஹிரு உதார 63, அஞ்செலோ பெரேரா 53, தரிந்து வீரசிங்க 3/52, சம்பத் பெரேரா 2/70

கண்டி சுங்க கழகம் – 81 (27.2) – சமில கருணாரத்ன 2/08, சச்சின்த பீரிஸ் 2/14, சதுரங்க டி சில்வா 2/21, சஹன் ஆரச்சிகே 2/25

முடிவு – NCC கழகம் 198 ஓட்டங்களால் வெற்றி

பாகிஸ்தான் சென்று மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ள சங்கக்கார

குமார் சங்கக்கார தலைமையிலான….

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 272/4 (45) – ஷான் ப்ரியன்ஜன் 89, மினோத் பானுக 66, ரொன் சந்திரகுப்த 59, மலிந்து மதுரங்க 22

காலி கிரிக்கெட் கழகம் – 63/3 (21) – வினுர துல்சர 33*, ஜெகொப் சச்சின் 21, மாலிந்த புஷ்பகுமார 2/31

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் டக்வத் லூவிஸ் முறைப்படி 55 ஓட்டங்களால் வெற்றி 


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட நலன்புரி விளையாட்டுக் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 277/9 (50) – உதார ஜயசுந்தர 83, ரொஷேன் சில்வா 64, ஜனித் லியனகே 49*, ஷெஹான் பெர்னாண்டா 39, மதீஷ பெரேரா 4/56, பசிந்து மதுஷான் 2/56

நுகேகொட நலன்புரி விளையாட்டுக் கழகம் – 176 (45) – தெனுவன் ராஜகருணா 52, மொஹமட் சில்மி 30, ராஹுல் குணசேகர 25, அமில அபோன்சு 4/30, இஷான் ஜயரத்ன 2/27

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 101 ஓட்டங்களால் வெற்றி 

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 206/9 (34) – சஹன் கங்கானகே 61*, கசுன் அபேரத்ன 34, சானக்க ருவன்சிறி 28, சஹன் பீரிஸ் 20, லஹிரு விஜேதுங்க 3/47, ஷிஹான் டி சில்வா 2/22, ஜனித் சில்வா 2/28

இராணுவ கிரிக்கெட் கழகம் – 157/7 (27) – அசேல குணரத்ன 53, லக்ஷான் எதிரிசிங்க 33, ஹிமாஷ லியனகே 22, கேஷான் விஜேரத்ன 3/33, துனித் வெல்லாலகே 3/49

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் டக்வத் லூவிஸ் முறைப்படி 11 ஓட்டங்களால் வெற்றி 


இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம்

இலங்கை துறைமுக அதிகார சபை – 192 (47.5) – அதீஷ நாணயக்கார 72, மிதில அரவிந்த 25, யொஹான் டி சில்வா 20, சதுரங்க குமார 3/29, ஷெஹான் ஜயசூரிய 2/15, கமிந்து மெண்டிஸ் 2/23, திக்ஷல டி சில்வா 2/30

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 150/9 (36) – புலின தரங்க 56, ஷெஹான் ஜயசூரிய 37, சமிந்த பண்டார 4/42, மிதில அரவிந்த 3/23, ரஜீவ வீரசிங்க 2/22

முடிவு – இலங்கை துறைமுக அதிகாரசபை அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 33 ஓட்டங்களால் வெற்றி 

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் நடைபெறுவதில் தாமதம்

அயர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த…..

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் – 221 (46.4) – ரமேஷ் மெண்டிஸ் 63, நிபுன் கருணாநாயக்க 36, நிம்நத சுபசிங்க 29, பபசர வதுகே 27, மதுக லியனபத்திரனகே 2/19, பிரசன்ன ஜயமான்ன 2/26, சதேஷ் பத்திரனகே 2/40

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 135/4 (31.2) – கிரன் பவல் 88*, தரங்க பரனவிதான 30, சச்சித்ர சேரசிங்க 3/29

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் டக்வத் லூவிஸ் முறைப்படி 12 ஓட்டங்களால் வெற்றி 


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கிரிக்கெட் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 239/5 (50) – சுமிந்த லக்‌ஷான் 53*, மாதவ நிமேஷ் 53*, சாமர பெர்னாண்டோ 51, பி. பராக்ரம 35, இஷான் அபேசேகர 2/31, ஹஷேன் டில்மின் 2/49

களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 148/7 (46) – தசுன் செனவிரத்ன 41, இஷான் அபேரத்ன 31*, கெவின் பீரிஸ் 20*, நுஸ்கி அஹ்மட் 3/27, சுமிந்த லக்ஷான் 2/17, அரவிந் ப்ரேமரத்ன 2/21

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் டக்வத் லூவிஸ் முறைப்படி 63 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<