Home Tamil இலங்கை அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லசித், லஹிரு!

இலங்கை அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லசித், லஹிரு!

93

கராச்சியில் இன்று (19) ஆரம்பமாகியுள்ள இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து, 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், உஸ்மான் ஷின்வாரிக்கு பதிலாக யசீர் ஷாவை அணியில் இணைத்திருந்தது. இலங்கை அணியில் உபாதைக்குள்ளாகியிருந்த கசுன் ராஜிதவுக்கு பதிலாக லசித் எம்புல்தெனிய இணைக்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தான் சென்று மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ள சங்கக்கார

குமார் சங்கக்கார தலைமையிலான……

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவன் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ 

பாகிஸ்தான் அணி

அஸார் அலி (அணித்தலைவர்), ஆபித் அலி, பாபர் அஸாம், ஹாரிஸ் சுஹைல், மொஹம்மட் அப்பாஸ், மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), நஸீம் ஸாஹ், சஹீன் அப்ரிடி, ஷான் மஸூத், யசீர் ஷா, அசாட் சபிக்

இதன்படி, இரண்டு அணிகளும் களமிறங்கியதில் இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. வேகப் பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க, பாகிஸ்தான் அணி மதிய போசன இடைவேளைக்குள் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. விஷ்வ பெர்னாண்டோ தனது ஒரே ஓவரில் ஷான் மசூட் மற்றும் அஷார் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த, லஹிரு குமார, அபீத் அலியின் (38) விக்கெட்டினை கைப்பற்றினார்.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாபர் அஷாம் மற்றும் அசாட் சபீக் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்துடன் ஓட்டங்களை உயர்த்தியது. இவர்கள் இருவரும் 62 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், பாபர் அஷாம் 60 ஓட்டங்களுடன், லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வருகைத்தந்த ஹரிஸ் சொஹைல் (9) குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தேநீர் இடைவேளையின் போது, பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதனைத் தொடர்ந்து ஆரம்பித்த போட்டியில் இலங்கை அணியின் லஹிரு குமார மற்றும் லசித் எம்புல்தெனிய அபாரமாக பந்துவீச, பாகிஸ்தான் அணி வெறும் 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அசாட் சபீக் 63 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர நிறைவில், 3 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில், திமுத் கருணாரத்ன அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் (8*) மற்றும் லசித் எம்புல்தெனிய (3*) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும், சஹீன் ஷா அப்ரிடி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர். இதேவேளை, இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை எட்டுவதற்கு 127 ஓட்டங்களை பெறவேண்டும்.

Result


Sri Lanka
271/10 (85.5) & 212/10 (62.5)

Pakistan
191/10 (59.3) & 555/3 (131)

Batsmen R B 4s 6s SR
Shan Masood b Vishwa Fernando 5 15 1 0 33.33
Abid Ali lbw b Lahiru Kumara 38 66 7 1 57.58
Azhar Ali b Vishwa Fernando 0 2 0 0 0.00
Babar Azam st Niroshan Dickwella b Lasith Embuldeniya 60 96 8 1 62.50
Asad Shafiq c Vishwa Fernando b Lahiru Kumara 63 126 6 0 50.00
Haris Sohail lbw b Lasith Embuldeniya 9 30 0 1 30.00
Mohammad Rizwan b Lahiru Kumara 4 2 1 0 200.00
Yasir Shah lbw b Lahiru Kumara 0 1 0 0 0.00
Mohammad Abbas c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 0 9 0 0 0.00
Shaheen Shah Afridi c Angelo Mathews b Lasith Embuldeniya 5 9 1 0 55.56
Naseem Shah not out 1 1 0 0 100.00


Extras 6 (b 4 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 191/10 (59.3 Overs, RR: 3.21)
Fall of Wickets 1-10 (6.1) Shan Masood, 2-10 (6.3) Azhar Ali, 3-65 (20.3) Abid Ali, 4-127 (39.5) Babar Azam, 5-167 (51.5) Haris Sohail, 6-172 (52.2) Mohammad Rizwan, 7-172 (52.3) Yasir Shah, 8-179 (55.5) Mohammad Abbas, 9-185 (58.1) Asad Shafiq, 10-191 (59.3) Shaheen Shah Afridi,

Bowling O M R W Econ
Vishwa Fernando 13 3 31 2 2.38
Lahiru Kumara 18 5 49 4 2.72
Dimuth Karunaratne 1 0 11 0 11.00
Lasith Embuldeniya 20.3 3 71 4 3.50
Dilruwan Perera 7 0 23 0 3.29
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 4 19 0 0 21.05
Dimuth Karunaratne b Mohammad Abbas 25 42 4 0 59.52
Kusal Mendis c Haris Sohail b Mohammad Abbas 13 27 1 0 48.15
Angelo Mathews c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 13 44 1 0 29.55
Lasith Embuldeniya c Asad Shafiq b Mohammad Abbas 13 34 1 0 38.24
Dinesh Chandimal c Shan Masood b Haris Sohail 74 143 10 0 51.75
Dhananjaya de Silva c Mohammad Abbas b Shaheen Shah Afridi 32 56 2 1 57.14
Niroshan Dickwella b Mohammad Abbas 21 35 3 0 60.00
Dilruwan Perera lbw b Shaheen Shah Afridi 48 84 6 1 57.14
Vishwa Fernando not out 5 32 0 0 15.62
Lahiru Kumara b Shaheen Shah Afridi 0 2 0 0 0.00


Extras 23 (b 4 , lb 10 , nb 3, w 6, pen 0)
Total 271/10 (85.5 Overs, RR: 3.16)
Fall of Wickets 1-28 (6.2) Oshada Fernando, 2-39 (12.2) Dimuth Karunaratne, 3-61 (16.2) Kusal Mendis, 4-78 (26.3) Lasith Embuldeniya, 5-80 (29.1) Angelo Mathews, 6-147 (47.3) Dhananjaya de Silva, 7-184 (58.6) Niroshan Dickwella, 8-235 (72.5) Dinesh Chandimal, 9-271 (85.3) Dilruwan Perera, 10-271 (85.5) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 26.5 5 77 5 2.91
Mohammad Abbas 27 9 55 4 2.04
Naseem Shah 16 1 71 0 4.44
Yasir Shah 13 0 43 0 3.31
Haris Sohail 3 0 11 1 3.67
Batsmen R B 4s 6s SR
Shan Masood c Oshada Fernando b Lahiru Kumara 135 198 7 3 68.18
Abid Ali lbw b Lahiru Kumara 174 281 21 1 61.92
Azhar Ali st Niroshan Dickwella b Lasith Embuldeniya 118 157 13 0 75.16
Babar Azam not out 100 131 8 1 76.34
Mohammad Rizwan not out 21 19 2 0 110.53


Extras 7 (b 0 , lb 5 , nb 0, w 2, pen 0)
Total 555/3 (131 Overs, RR: 4.24)
Fall of Wickets 1-278 (68.3) Shan Masood, 2-355 (90.1) Abid Ali, 3-503 (123.1) Azhar Ali,

Bowling O M R W Econ
Vishwa Fernando 24 2 105 0 4.38
Lahiru Kumara 29 5 139 2 4.79
Lasith Embuldeniya 50 4 193 1 3.86
Dilruwan Perera 21 1 94 0 4.48
Dhananjaya de Silva 7 0 19 0 2.71


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne c Mohammad Rizwan b Mohammad Abbas 16 28 2 0 57.14
Oshada Fernando c Asad Shafiq b Yasir Shah 102 180 13 0 56.67
Kusal Mendis c Babar Azam b Naseem Shah 0 4 0 0 0.00
Angelo Mathews c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 19 33 1 0 57.58
Dinesh Chandimal lbw b Naseem Shah 2 29 0 0 6.90
Dhananjaya de Silva b Yasir Shah 0 8 0 0 0.00
Niroshan Dickwella b Haris Sohail 65 76 11 0 85.53
Dilruwan Perera c Mohammad Rizwan b Naseem Shah 5 8 1 0 62.50
Lasith Embuldeniya c Mohammad Rizwan b Naseem Shah 0 1 0 0 0.00
Vishwa Fernando b Naseem Shah 0 9 0 0 0.00
Lahiru Kumara not out 0 1 0 0 0.00


Extras 3 (b 0 , lb 3 , nb 0, w 0, pen 0)
Total 212/10 (62.5 Overs, RR: 3.37)
Fall of Wickets 1-39 (9.4) Dimuth Karunaratne, 2-40 (10.3) Kusal Mendis, 3-70 (20.4) Angelo Mathews, 4-96 (30.1) Dinesh Chandimal, 5-97 (31.5) Dhananjaya de Silva, 6-201 (57.3) Niroshan Dickwella, 7-212 (60.1) Dilruwan Perera, 8-212 (60.2) Lasith Embuldeniya, 9-212 (61.5) Oshada Fernando, 10-212 (62.5) Vishwa Fernando,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 14 3 51 1 3.64
Mohammad Abbas 12 2 33 1 2.75
Naseem Shah 12.5 4 31 5 2.48
Yasir Shah 20 3 84 2 4.20
Haris Sohail 4 0 10 1 2.50



>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<