பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து இலங்கை அதிகாரிகள் திருப்தி

150
©DAWN NEWS

பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள்

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளை……….

ஏதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கராச்சி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (08) பாகிஸ்தானின் மத்திய பொலிஸ் அலுவலகத்திற்கு சென்று சிந்து மாநிலத்தின் பொலிஸ் மாஅதிபர் கலாநிதி கலீம் இமாமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்

ஐந்து பேர் கொண்ட இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தலைமை தாங்கினார்.

அதேபோல, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி (பிசிபி) ஐந்து பேர் கொண்ட குழுவும் இதில் கலந்துகொண்டதுடன், அந்நாட்டு கிரிக்கெட் சபையின் சர்வதேசப் போட்டிகளுக்கான பிரதான செயற்பாட்டு பணிப்பாளர் சாகிர் கானும் இதில் கலந்துகொண்டார்

மேலும், இந்த கூட்டத்தில் சிந்து மாநில உள்துறை செயலாளர், பாகிஸ்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு பொலிஸ் பிரிவின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள……

ஏதிர்வரும் ஒக்டோபர் மாதம் கராச்சியில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள், மூலோபாயம் மற்றும் இது தொடர்பான அனைத்து திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் வைத்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் இலங்கை தரப்பினரிடம் தெரிவித்தார்.  

அதேபோல, அமெரிக்காவில் 2009 செப்டெம்பர் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானும் நிச்சயமற்ற மற்றும் மோசமான சட்டம் மற்றும் ஒழுங்கு சூழ்நிலையின் பிடியில் இருந்தது. ஆனால் ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் பிற சட்ட அமலாக்கர்களின் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளுக்குப் பிறகு, பாதுகாப்பு நிலைமை மேம்பட்டது மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையும் பலப்படுத்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்

எனவே, இலங்கை கிரிக்கெட் அணிக்கு விமான நிலையம் முதல் மைதானம் வரை சர்வதேச தரத்திலான முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்

பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் அதிரடியாக நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள்….

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதில் நகர பொலிஸ் பிரிவுகள் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக கராச்சி பொலிஸ் பிரிவின் தலைவர் குலாம் நபி மேமன் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவித்தார்.

பொலிஸ் கொமாண்டோக்களை நிலைநிறுத்துவதும், அரங்கிற்கு செல்லும் அனைத்து வழிகளையும் சுற்றி வளைப்பது உள்ளிட்ட பிற பாதுகாப்பு நடவடிக்கைகளில், கணினிமயமாக்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை சரிபார்ப்பதும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளுக்கும், மேற்கிந்திய தீவுகள் பெண்கள் அணிக்கும் வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளன என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

இறுதியாக, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது திருப்தியை தெரிவித்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹபீஸ் மற்றும் மலிக்கை புதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான ….

இதுதொடர்பில் பாகிஸ்தானின் சிந்து மாநில உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் பாகிஸ்தானின் டொவ்ன் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் முதலாம் திகதி கராச்சியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்

இதன்படி, சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு சர்வதேச அணியொன்று பாகிஸ்தானுக்கு சுற்றுப்யணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<