பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

181
ENGLAND TEST SQUAD
Getty Image

பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடிய ஜோ ரூட் தலைமையிலான அதே அணி பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.

>> டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி

ஜோ ரூட் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்தது.

எனினும், முதல் போட்டியில் தலைவராக விட்ட தவறை நிவர்த்தி செய்த பென் ஸ்டோக்ஸ், மான்செஸ்டரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என அசத்தி அந்த அணிக்கு அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்து தொடரை 1 – 1 என சமப்படுத்தினார்.

இதனிடையே, இந்த டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் 0-1 என்ற இங்கிலாந்து அணி பின்னடைவு கண்டதற்குக் காரணம் ஸ்டூவர்ட் ப்ரோட்டை முதல் டெஸ்ட்டில் பின் கதிரையில் உட்கார வைத்தது. 

ஆனால், அதற்கு பதிலடி கொடுத்த ப்ரோட், டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைக்க, இங்கிலாந்து அணி 2-1 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

எனவே, விஸ்டன் கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பற்றியது, 2014 இல் இலங்கைக்கு எதிராக 1-0 என்று டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இங்கிலாந்து அணி உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை தோற்கவில்லை என்ற மகத்தான சாதனையை தக்கவைத்துக் கொண்டது.

>> Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

இதற்கிடையில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 5ஆம் திகதி மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது. 

இதில் இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ள அசார் அலி தலைமையிலான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் நேற்று (28) அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அணியுடன் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று (29) அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் இங்கிலாந்து அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எட் ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடிய அதே 14 பேர் கொண்ட அணியே பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

>> இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணி தொடர்பில் அந்ந அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எட் ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. ஆனாலும், உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் போதுமான மாற்று வீரர்களை வைத்திருக்க விரும்புகிறோம்.

எனினும், மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட நாங்கள் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். எனவே அணியில் நாங்கள் சிறந்த சமநிலையை பேணி வருகிறோம். 

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் போது இங்கிலாந்து அணியில் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

>> டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்றுக்குள் நுழைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற மூன்று போட்டியிலும் இங்கிலாந்து அணியில் மாற்று வீரர்களாக பெயரிடப்பட்டிருந்த டான் லோரன்ஸ், கிரேக் ஓவர்டன், ஒல்லி ரொபின்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதனால் குறித்த நான்கு வீரர்களையும் இங்கிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதில் ஜோ டென்லிக்கு அயர்லாந்து தொடருக்கான ஒருநாள் கிரிக்கெட் முகாமிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

>> உயிர்-பாதுகாப்பு வளையத்தில் ஐந்து வீரர்களை விடுவித்த இங்கிலாந்து

இதனிடையே, பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ப்ரேஸி, பென் போக்ஸ், ஜெக் லீச் மற்றும் டான் லோரன்ஸ் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13ஆம் திகதியும், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 21ஆம் திகதியும் சவுத்தெம்டனில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்

ஜோட் ரூட் (அணித் தலைவர்), பென் ஸ்டோக்ஸ் (உப தலைவர்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜொப்ரா ஆர்சர், ரோரி பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஷக் கிராவ்லி, ஒல்லி போப், டொம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், சாம் கரண், டொமினிக் பெஸ்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<