ஹபீஸ் மற்றும் மலிக்கை புதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கிய பாகிஸ்தான்

1639

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான 2019 – 2021ம் ஆண்டு பருவகாலத்துக்கான வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து அனுபவ சகலதுறை வீரர்களான  சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கால்பந்து ரசிகரான கிரிக்கெட் நட்சத்திரம் கோஹ்லி

இன்று உலகில் இருக்கும் சிறந்த கிரிக்கெட் ………

அதுமாத்திரமின்றி, கடந்த பருவகாலத்தில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் 33 வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 19ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த முறை 5 பிரிவுகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதுடன், இம்முறை அவை 3 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளன.

உலகக் கிண்ணத்தின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றிருந்த சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் கடந்த முறை A மற்றும் B பிரிவுகளில் முறையே இடம்பெற்றிருந்தனர். இம்முறை அவர்கள், ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், மொஹமட் அமீர் மற்றும் பக்ஹர் சமான் ஆகியோர் ஒப்பந்தத்தில் தரமிறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த முறை மொஹமட் அமீருக்கு A பிரிவு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததுடன், பக்ஹர் சமானுக்கு B  பிரிவு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இம்முறை இருவரும் C பிரிவு ஒப்பந்தத்திற்கு தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வீரர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்சமான A பிரிவு ஒப்பந்தத்தினை பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், பாபர் அசாம் மற்றும் யசீர் ஷா ஆகியோர் மாத்திரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ள வீரர்கள்

  • A பிரிவு – சர்பராஷ் அஹமட், பாபார் அசாம், யசீர் ஷா
  • B பிரிவு – அசாட் சபீக், அஸார் அலி, ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், மொஹமட் அபாஸ், சதாப் கான், சஹீன் சாஹ் அப்ரிடி, வஹாப் ரியாஸ்
  • C பிரிவு – அபிட் அலி, ஹசன் அலி, பக்ஹர் சமான், இமாட் வசீம், மொஹமட் அமீர், மொஹமட் ரிஸ்வான், சான் மசூட், உஸ்மான் சின்வாரி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<