பந்துவீச்சாளர்களின் உதவியுடன் காலிறுதிக்குள் நுழைந்த மஹானாம கல்லூரி

13

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/18 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிசன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்ததுடன், மேலும் 2 போட்டிகள் ஆரம்பமாகின.

மஹானாம கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளின் படி மஹானாம கல்லூரி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஹேஷான் நெலிகவின் சகலதுறை ஆட்டத்தால் வலுப்பெற்ற மஹானாம கல்லூரி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில்…

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மஹானாம கல்லூரியினர் தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரியனர், மஹானாம பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியிருந்ததுடன், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 72 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மஹானாம கல்லூரியின் ஹேஷான் நெலிக 4 விக்கெட்டுக்களையும், பெதும் பொதேஜு மற்றும் பியுமால் சந்தீப ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த மஹானாம கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்ஸைப் போன்றே துடுப்பாடி 137 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதனையடுத்து 213 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரி அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களினை பெற்றுக்கொண்ட போது மழை குறுக்கிட போட்டி சமநிலையடைந்து.

அவ்வணிக்காக யெஷான் விக்ரமஆரச்சி ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

மஹானாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 148/10 (58.4) – ஹேஷான் நெலிக 40, வத்சர பெரேரா 34, பவன் ரத்னாயக்க 28, சவான் பிரபாஷ் 3/16, நிபுன் லக்ஷான் 3/47, யேஷான் விக்ரமஆரச்சி 2/04

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 72/10 (22.3) – ஹேஷான் நெலிக 4/21, பெதும் பொதேஜு 2/24, பியுமால் சந்தீப 2/25

மஹானாம கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 137/10 (73.2) – வினுக ரூபசிங்க 34, பெதும் பொதேஜு 26, பிஷான் மெண்டிஸ் 20, சந்தரு டயஸ் 3/26, அயேஷ் ஹர்ஷன 3/50

தர்ஸ்டன் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 156/6 (20.1) – யெஷhன் விக்ரமஆரச்சி 95*, ஹேஷான் நெலிக 2/78

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

தேசிய மட்டத்தில் சம்பியனாகிய யாழ் சென் ஜோன்ஸ் இளம் அணி

அணித் தலைவர் ஏ. அபிஷேக்கின்…

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை எதிர் லும்பினி கல்லூரி, கொழும்பு

மொரட்டு மஹா வித்தியாலய மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மொரட்டு அணியினர், முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த லும்பினி கல்லூரியினர் லகிந்து உபேந்திர(60), கவின் பீரிஸ்(50) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 100 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மொரட்டு மஹா வித்தியாலயம், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக நிஷான் மதுஷ்க(72), ஜனித் செவ்மித்(53) ஆகியோர் அரைச்சதங்களைக் கடந்து வலுசேர்த்திருந்தனர்.

லும்பினி கல்லூரிக்காக சகலதுறையிலும் அசத்தியிருந்த கவின் பீரிஸ் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து 128 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு களமிறங்கிய லும்பினி கல்லூரி வீரர்கள் 41 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

மொரட்டு மஹா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) 139/10 (39.4) – ஷெஹத நிதேந்திர 48, நிஷhன் மதுஷ்க 23, பசிந்து நதுன் 3/32, விமுக்தி குலதுங்க 3/38, பிரபாத் மதுஷங்க 2/19, அமித் தனஞ்சய 2/24

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 239/10 (51.4) – லகிது உபேந்ர 60, கவின் பீரிஸ் 50, ரன்மல் பெர்னாண்டோ 36, ரன்மல் பெர்னாண்டோ 36, ரஷான் கவிஷ்க 4/96, ஹாஷெஹான் ஜீவன்த 3/43, நதித் மிஷேந்திர 2/42

மொரட்டு மஹா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 228/10 (65.2) – நிஷான் மதுஷ்க 72, ஜனித் செவ்மித் 53, ஷெஹான் ஜீவன்த 23, கவின் பீரிஸ் 5/81, விமுக்தி குலதுங்க 3/81

லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 41

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

சுதந்திர கிண்ணத்திற்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

மார்ச் மாதம் ஆரம்பமாகும் சுதந்திர…

ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

கந்தானை டி மெசெனட் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த அணியினர், இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றநிலையில் மழை குறுக்கிட முதல் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து இன்றைய நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆனந்த கல்லூரிக்கு லஹிரு ஹிரன்ய சதமடித்து வலுசேர்த்திருந்தார்.

எனினும், இன்றைய நாள் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் ஆட்டத்தை மீண்டும் தொடர முடியாது போனதுடன், போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 220/7 (55)லஹிரு ஹிரன்ய 100*, அசேல் சிகேரா 29, கனிஷ்க ரன்திலககே 27, பிரித்வி ஜெகராஜசிங்கம் 3/58, மஹேஷ் தீக்ஷன 2/46  

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

மொரட்டுவைடி சொய்ஸா மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய செபஸ்டியன்ஸ் கல்லூரி, நுவனிது பெர்னாண்டோ(89), மலிந்த பீரிஸின் அரைச்சதங்களின் உதவியுடன் 6 விக்கெட்டுக்களை இழந்து 351 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை எட்டியது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் வெஸ்லி கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியிருந்தது. எனினும் போட்டியின் பிற்பாதியில் மழை குறுக்கிட இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 351/6d (64.3)நுவனிது பெர்னாண்டோ 89, மலிந்த பீரிஸ் 53, நிஷித அபிலாஷ் 46, தரூஷ பெர்னாண்டோ 44, சகுன்த லியனகே 2/67

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 32/2 (6.3)ஜனிஷ்க பெரேரா 2/13

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி, கட்டுனேரிய எதிர் புனித அந்தோனியார் கல்லூரி வத்தளை

புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய செபஸ்டியன்ஸ் கல்லூரி, தமது முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அவ்வணிக்காக அயோன் ஹேஷர மாத்திரம் நிதானமாக துடுப்பெடுத்தாடி சதம் கடந்து வலுசேர்த்திருந்தார்.

எனினும், போட்டியின் பிற்பாதியில் மழை குறுக்கிட முதல் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 309/9d  (70)அயோன் ஹேஷர 111, உதார மெண்டிஸ் 37, கவிந்து இரோஷ் 36, சமித டில்ஷான் 31, கவீஷ துலன்ஜன 3/66, கவிந்து மதுக 2/65

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.