சுதந்திர கிண்ணத்திற்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

2003

மார்ச் மாதம் ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண (Nidahas Trophy) முக்கோண T-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் 20 பேர் அடங்கிய உத்தேச குழாம் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

[rev_slider LOLC]

பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த முக்கோண ஒரு நாள் தொடரின் போது காயத்திற்கு உள்ளாகிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான இலங்கை அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதையிலிருந்து இருந்து இன்னும் மீளாத காரணத்தினால், இந்த உத்தேச குழாத்தில் அவர் உள்ளடக்கப்படவில்லை. மெதிவ்ஸ் இல்லாத இலங்கையை இத்தொடரின் மூலம் மீண்டும் டெஸ்ட் அணித்தலைவரான தினேஷ் சந்திமால் வழிநடாத்துகின்றார்.  

இலங்கை வரும் பங்களாதேஷ் குழாமில் காயத்திலிருந்து மீளாத ஷகீப்

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு தொடருக்கான பங்களாதேஷ் குழாமுக்கு காயத்தில் இருந்து முழுமையாக சுகம் பெறாத நிலையில் அணித்தலைவர் ஷகீப் அல் ஷஸன் அழைக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் சந்திமாலின் கீழிருந்த இலங்கை அணி பங்களாதேஷில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடர், T-20 தொடர் ஆகிய அனைத்தினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காயத்திற்கு உள்ளாகியிருந்த ஏனைய வீரர்களான குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தற்போது பூரணமாக குணமாகிய நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் T-20 தொடரில் விளையாடிவருகின்றனர். சிறப்பான ஆட்டத்தினை காட்டி வரும் இந்த மூன்று வீரர்களும் உத்தேச குழாத்தில் அடக்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும், இந்த உள்ளூர் தொடரில் 3 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 8 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷெஹான் மதுசங்க, மற்றும் அதிரடி சகலதுறை வீரர் அசேல குணரத்ன ஆகியோர் ஏற்கனவே காயம் காரணமாக சுதந்திர கிண்ணத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் இந்த சுதந்திர கிண்ண T-20 தொடரில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தேச இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், சதீர சமரவிக்ரம, நிரோஷன் திக்வெல்ல, இசுரு உதான, ஜெப்ரி வண்டர்செய், அகில தனன்ஞய, அமில அபொன்சோ, அசித்த பெர்னாந்து, லஹிரு குமார, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, தனன்ஞய டி சில்வா