லசித் உடகேயின் அதிரடி பந்து வீச்சில் 114 ஓட்டங்களுக்கு சுருண்ட அந்தோனியர் கல்லூரி

202
U19 Schools Cricket

பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் தொடரில் இன்றைய தினம் ஆரம்பித்த போட்டிகளில் துடுப்பாட்டத்தில் மோவின் சுபசிங்க 97 ஓட்டங்களை விளாசிய அதே நேரம், பந்து வீச்சில் லசித் உடகே 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை மிரட்டினர்.  

வத்தளை, புனித அந்தோனியர் கல்லூரி எதிர்  புனித மரியார் கல்லூரி          

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கேகாலை புனித மரியார் கல்லூரி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அந்தோனியர் அணி முதல் இன்னிங்சுக்காக 48.3 ஓவர்ளுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதிரடியாக பந்து வீசிய லசித் உடகே எதிரணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்தி 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அபார சதம் கடந்த சந்தருவன், சுரவீர: முதல் நாளில் வலுப்பெற்றுள்ள ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகள்

பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமாகிய 4 போட்டிகளில்..

அதனைத் தொடர்ந்து இலகுவான முதல் இன்னிங்ஸ் இலக்கை நோக்கி துடுப்பாடிய மரியார் கல்லூரி இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் வெற்றியோடு 7௦ ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

போட்டியின் சுருக்கம்  

புனித அந்தோனியர் கல்லூரி: 114 (48.3) – அரிந்து பசிந்து 36, ருக்ஷான் ரொட்ரிகோ 26,  எறங்க மதுஷான் 20, லசித் உடகே 5/33, 2/18 றிசாட் ரஹிம்

புனித மரியார் கல்லூரி: 184/7 (44) – சந்தரு ஷ்ரியசாந்த  41, சுஜித் குமார 39, திமிர குமார 25, லசித் உடகே 25, ஷங்க மதுபஷன  4/36, கவிந்து மதுக்க 2/30 


புனித செர்வாடியஸ் கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

மெசனொட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாத்தறை செர்வாடியஸ் கல்லூரி அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி, 53.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பசிந்து மனுப்பிரிய ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த அதே வேளை, கேஷர நுவந்த, மிதில அரவிந்த, சஷான் பெர்னாண்டோ,பெர்னாண்டோ தேஷான் ஆகியோருடன் வோஷித செனவிரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் இலகுவான முதல் இன்னிங்ஸ் இலக்கை நோக்கி களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இக்கட்டான நிலையில் இருக்கிறது. சிறப்பாக பந்து வீசிய  சானக துஷான் மற்றும் நேத்தும் செஷான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வாடியஸ் கல்லூரி: 147(53.3) – பசிந்து மனுப்பிரிய 37*, திலான் பிரஷான் 33, கேஷர நுவந்த 33, மிதில அரவிந்த 2/25, சஷான் பெர்னாண்டோ 2/32, பெர்னாண்டோ தேஷான்  2/30, வோஷித செனவிரத்ன 2/29

டி மெசனொட் கல்லூரி: 89/ 5(39) – தேஷான் பெர்னாண்டோ 26*, சானக துஷான்  2/27, நேத்தும்  செஷான் 2/18


இசிபதன கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

B குழுவில் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் சுற்றுப் போட்டிகளுக்கான ஆட்டம் இன்றைய தினம் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இசிபதன கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய வெஸ்லி கல்லூரி மோவின் சுபசிங்கவின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 2௦2 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சுகசிங்க வெறும் 3 ஓட்டங்களினால் சதத்தைத் தவறவிட்டார்.

பந்து வீச்சில் எதிரணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்திய லிசுல வினத் மற்றும்  லஹிரு தில்ஷான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய இசிபதன கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்றிருந்தது. சிறப்பாக பந்து வீசிய ருச்சிர தங்கல்ல 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்  

வெஸ்லி கல்லூரி: 202 (57) – மோவின் சுபசிங்க  97, மொஹமட் உபைதுல்லா 27, லிசுல வினத் 3/30, லஹிரு தில்ஷன் 3/49, நிரஞ்சன் வன்னியாராச்சி 2/27

இசிபதன கல்லூரி: 133 / 4 (33) ஹெஷான் பெர்னாண்டோ 43, சஞ்சுலஅபேவிக்ரம 30, ருச்சிரா தங்கல்ல 2/35

நாளை இந்த அனைத்து போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறும்.