“த ஹன்ரட்” கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க

75

அடுத்த ஆண்டின் (2020) நடுப்பகுதியில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள அணிக்கு 100 பந்துகள் கொண்ட ”த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் இம்மாதம் 20ஆம் திகதி  நடைபெறவுள்ளது.  

MCC இன் தலைவராக பொறுப்பேற்ற குமார் சங்கக்கார

கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட ……

இந்நிலையில், இந்த கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கவிருக்கும் நட்சத்திர வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.  

அந்தவகையில், புதுவகையான விதிமுறைகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்த லசித் மாலிங்க, இந்த கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்த இலங்கையின் ஒரே நட்சத்திர வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்த வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இயன் மோர்கனும் பங்கெடுக்கவிருப்பதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர் கிறிஸ் கெயிலும் ஏலத்துக்கான தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ் கெயில் தவிர கீரோன் பொல்லார்ட் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றொரு நட்சத்திர வீரராக இருக்கின்றார். 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர் ஆகியோரும் இந்த வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க தங்களது விருப்பத்தினை தெரிவித்திருப்பதோடு, வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க்கும் தனக்கு ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

வளர்ந்துவரும் ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய ………

இன்னும், இந்த வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் ஏனைய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களாக பாகிஸ்தானின் முன்னாள் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழல் நட்சத்திரம் ரஷீட் கான், பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹசன்  ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் தவிர இந்த வீரர்கள் ஏலத்தில் பாப் டூ ப்ளேசிஸ், ககிஸோ றபாடா, டொம் கர்ரன், மொயின் அலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன் மற்றும் ஜேசன் ரோய் போன்ற முக்கிய முன்னணி வீரர்களும் பங்கெடுக்கவிருக்கின்றனர். 

த ஹன்ரட் கிரிக்கட் தொடரின் வீரர்கள் ஏலம் 7 விலைப் பட்டியல்களின் அடிப்படையில் இடம்பெறவிருக்கின்றமை முக்கிய அம்சமாகும். அதோடு இந்த கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் 7 பிராந்தியங்களை சேர்ந்த 8 அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<